சரோஜினி ஹெம்ப்ராம்
சரோஜினி ஹெம்ப்ராம் (Sarojini hembram, பிறப்பு: 1 அக்டோபர் 1959) ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். 2009ஆம் ஆண்டில் ஒடிசா சட்டமன்றத்தின் பாங்கிரிபோசி தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஒடிசா அரசாங்கத்தில் துணி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களுக்கான அமைச்சரானார். இவர் ஒடிசாவிலிருந்து 2014ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] சுயசரிதைசரோஜினி ஹெம்ப்ராம், ஒடிசாவின் மயூர்பஞ்சு மாவட்டத்தின் ராயரங்க்பூர் நகரில் பிறந்தார். இவர் சைதன்யா பிரசாத் மஜி என்பவருக்கும், தமயந்தி மஜி ஆகியோருக்கும் மகளாகப் பிறந்தார். இவர் உத்கவ் சங்கித் மகாவித்யாலயாவில் இசையில் முதுகலை பட்டம் பெற்றார். இதற்குமுன் பாரிபாய்டுயுடா கே. என். ஜி. உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார். இவரது கணவர் பாகீரதி நாயக் ஒரு சமூக சேவையாளர் ஆவார்.[4][5] 1990 முதல்-1999 ஆண்டு வரை, சரோஜினி ஹெம்ப்ராம் புவனேசுவரில் உள்ள நஹர்கந்தா, ஜெயதேவ் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இசைத்துறையில் விரிவுரையாளராக பணியாற்றினார். இவர் சந்தாளி, இந்தி, ஆங்கிலம், ஒடியா மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர். 1996ஆம் ஆண்டில், மயூர்பஞ்ச் மாவட்ட நலத்துறையின் பிரதிநிதியாக பணியாற்றினார். 2006ஆம் ஆண்டில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் கட்டாக் பிரதேச அலுவலகத்தின் ஆயுள் காப்பீடுதார்களின் அமைப்பின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஒரிசாவின் மாநில வள மையம் (வயது வந்தோர் கல்வி) திட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டார். 1983 முதல் கட்டாக்கின் அனைத்திந்திய வானொலியில் குரல் நாட்டுப்புற பாடகர்/கலைஞருக்கான நிகழ்ச்சிகாக இவர் அறியப்படுகிறார். ஒரு கலைஞரான இவர் பழங்குடி கலாச்சாரம் தொடர்பான பல கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவர் கலைஞரும், பின்னணி பாடகியும், நடிகையும், தயாரிப்பு நிர்வாகியுமாகவும் இருக்கிறார்.[6] அரசியல் வாழ்க்கைஇவர் 2008ஆம் ஆண்டில், மயூர்பஞ்ச் மாவட்ட பிஜு ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்த பதவியில் ஒரு வருடம் பணியாற்றினார். அடுத்த ஆண்டு (2009) ஒடிசா சட்டமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பு, இவரை சட்டமன்ற போட்டியாளராக கட்சி அறிவித்தது. எனவே, இவர் அரசியலில் சேர 2009ல் தனது அரசு வேலையை விட்டு விலகினார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜனதா முக்தி மோர்ச்சா கட்சியின் பலம் மிக்க சுதாம் மராண்டியை தோற்கடித்து பாங்கிரிபோசி (தனி) தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்குறிப்புகள்
வெளிப்புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia