சர்கோதா மாவட்டம்
சர்கோதா மாவட்டம் (Sargodha District), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் சர்கோதா ஆகும். 5,864 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில்[3]கோதுமை, அரிசி, கரும்பு மற்றும் எலுமிச்சை & ஆரஞ்சு அதிகம் பயிரிடப்படுகிறது.[4]2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 43,34,448 ஆகும்.[5]இம்மாவட்டம் தேசிய அசெம்பிளிக்கு (தொகுதி எண்கள்: 82, 83, 84, 85 மற்றும் 86) 5 தொகுதிகளையும், பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத்திற்கு 10 தொகுதிகளையும் கொண்டுள்ளது. மாவட்ட நிர்வாகம்சர்கோதா மாவட்டம் பல்வால், பெரா, கோட் மோமின், சகிவால், சர்கோதா, ஷாப்பூர் மற்றும் சிலான்வாலி என 7 வருவாய் வட்டங்களையும், 161 ஒன்றியக் குழுக்களையும் கொண்டுள்ளது.[6] மக்கள் தொகை பரம்பல்2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6,84,321 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 43,34,448 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 102.53 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 66.73%.[1][7]10 அகவைக்குட்பட்ட குழந்தைகள் 1,089,643 பேர் உள்ளனர்.[8]நகர்புற மக்கள் தொகை 16,09,587 (37.13%) மற்றும் கிராமப்புற மக்கள் தொகை 27,24,861 (62.87%) ஆக உள்ளது.[1] சமயம்
மொழிகள்இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக பஞ்சாபி மொழி பேசுகின்றனர்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia