சர்தால்
சர்தால் (Sarthal) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்திலுள்ள கிசுத்துவார் மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கு ஆகும். சர்தால் பள்ளத்தாக்கில் சர்தால் தேவி கோயில் உள்ளது.[1] கிஷ்துவாருக்கு தென்கிழக்கே 22.4 கிலோமீட்டர் தொலைவில் சர்தால் பள்ளத்தாக்கு உள்ளது. அன்னை சர்தால் தேவி ஆலயம்ஓர் இந்து மத ஆலயமான தேவி சர்தால் மாதா ஆலயம் சர்தால் யாத்திரை என்று அழைக்கப்படும் வருடாந்திர யாத்திரையின் காரணமாக புகழ் பெற்ற ஆலயமாகும். துர்கா தேவியின் மறு அவதாரமாகக் கருதப்படும் இந்த தேவியின் சிலை, முதலில் கிசுத்துவாரின் அரசர் அகர் தேவ் காலத்தில் உள்ளூர் மக்களால் கற்களால் செதுக்கப்பட்டது. பின்னர் 1936 ஆம் ஆண்டில் மகாராசா அசி சிங்கால் புதுப்பிக்கப்பட்டது. இது தோராயமாக கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பெரும்பாலும் குளிர்காலத்தில் இந்த ஆலயம் பனியால் மூடப்பட்டிருக்கும்.[2] 1993 கிஷ்துவார் படுகொலைகள்14 ஆகஸ்டு 1993 அன்று சார்தால் பகுதியில் உள்ள சார்தல் தேவி கோயிலுக்குச் சென்று பேருந்தில் கொண்டிருந்த 17 இந்துக்களை, மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திச் சென்று துப்பாக்கிக் குண்டுகளால் சுட்டுக் கொன்றனர்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia