சர்வதேசமயப்படுத்தலும் உள்ளூர்மயப்படுத்தலும்![]() கணணித்துறையில் சர்வதேசமயப்படுத்தலும் உள்ளூர்மயப்படுத்தலும் (Internationalization and localization) என்பது கணணி மென்பொருளை வெவ்வேறு மொழிகளுக்கும் வெவ்வேறு பிரதேசங்களுக்கும் பொருத்தமான முறையில் மாற்றி அமைப்பதை குறிக்கும். சர்வதேசமயப்படுத்தல் என்பது ஒரு ஒழுங்கு முறையாக மென்பொருளை வடிவமைக்கும் செயற்பாடாகும்.இது எவ்வித பொறியியல் மாற்றமும் இன்றி வெவ்வேறு மொழிகளுக்கும் வெவ்வேறு பிரதேசங்களுக்கும் மாற்றி அமைக்க உதவுகின்றது. உள்ளூர்மயப்படுத்தல் என்பது ஒரு ஒழுங்கு முறையாக மென்பொருளை குறிப்பிட்ட பிரதேசங்களுக்கோ அல்லது குறிப்பிட்ட மொழிகளுக்கோ குறிப்பிட்ட பாவனையாளர்களின் தேவைக்குரிய மொழியின் பாகங்களை சேர்ப்பதும் சொற்களை மொழி பெயர்ப்பதுமாகும். இவற்றின் சொற்களின் நீளம் பெரிது என்பதால் இவற்றை சுருக்கி எழுத்து கலந்த எண் வடிவத்தில் குறிப்பிடப்படும். ஆங்கிலத்தில் internationalization என்பது i18n என்று குறிப்பிடப்படும். அதாவது i க்கும் n க்கும் இடையில் பதினெட்டு எழுத்துக்கள் உள்ளன. இதேபோல் localization என்பது L10n என்று குறிப்பிடப்படும். இங்கு L என்பது உயர் மட்ட எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. i என்பதை தாழ் மட்ட எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் சர்வதேச மயப்படுத்தலில் உள்ள ஆங்கில எழுத்து i என்பதை உள்ளுர்மயப்படுத்தலில் L உள்ள ஆங்கில எழுத்து என்ற எழுத்துடன் வித்தியாசப்படுத்துவதற்கு. சில நிறுவனங்கள்,அதாவது மைக்ரோசாப்ட், ஐபிஎம் போன்றவை சர்வதேச்சமயப்படுத்தலையும் உள்ளுர்மயப்படுத்தலையும் ஒன்றாக இணைத்து உலகமயப்படுத்தல் என்று பயன்படுத்துகின்றன. உலகமயப்படுத்தல் என்பது ஆங்கிலத்தில் Globalization. இதை g11n என்று குறிப்பிடலாம். நோக்கம்சர்வதேசமயப்படுத்தல்,உள்ளூர்மயப்படுத்தல் என்னும் முயற்சி பின்வருவனவற்றை உள்ளடக்கியது:
இதில் முழுமைபடுத்தப்பட்டதும் கலாச்சாரத்திற்கு ஏற்றதுமான ஒழுங்குபடுத்தல் அவசியம். பெயர்களும் தலைப்புக்களும்.
எழுத்துமுறை மரபுகள்
சர்வதேச்சமயப்படுத்தளுக்கும் உள்ளுர்மயப்படுத்தளுக்குமான வித்த்யாசம் மிக நுட்பமானது. ஆனால் முக்கியமானது.சர்வதேசமயப்படுத்தல் என்பது ஒரு பொருளை முக்கியமாக உண்மையாக எங்கும் பயன்படுத்துவதற்காக மாற்றியமைப்பதாகும். உள்ளூர்மயப்படுத்தல் என்பது குறிப்பிட்ட விசேஷா அம்சங்களை குறிப்பிட்ட பாவனையாளர்களுக்கு ஏற்றதாக மாற்றியமைத்தல். சர்வதேசமயப்படுத்தல் ஒரு பொருளுக்கு ஒரு முறை மாட்டும் செய்யப்படும்.உள்ளூர்மயப்படுத்தல் ஒவ்வொரு வித்தியாசமான பொருள் இணைப்புக்களுக்கும் ஒவ்வொரு வித்தியாசமான பாவனையாளர்களுக்கும் செய்யப்படும். இவ் ஒழுங்கு முறையானது புர்த்தி செய்கின்றதும் கட்டாயமாக இவை இணைந்து ஒரு குறிப்பிடப்பட்ட இலக்கை உலகளாவிய ரீதியில் அடையக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
உள்ளுர்மயப்படுத்தல்லுக்குரிய தனித்துவமான பாடங்கள்
இடர்பாடுகள்ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழி பெயர்ப்பது என்பது சுலபம்,ஆனால் அந்த பொருளின் வாழ்க்கை வட்டம் முழுவதும் அதற்குரிய மொளிப்ர்யர்ப்பை சீராக பேணுவது என்பது கடினம்.உதாரணத்திற்கு ஒரு செய்தியை திருத்தியமைத்து பாவனையாளர்களுக்கு காட்டும் பொழுது அதே செய்தியை மொழிபெயர்த்த மொழிளையும் திருத்தியமைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பொருளின் விருத்தி செய்யும் நேரம் நீளமாகும். உள்ளுர்மயப்படுதத்தும் போது சில குறைகள் எழ வாய்ப்புண்டு.அதாவது எழுதும் திசைகள்,எழுத்துக்களை நிரற்படுத்தல் போன்றன. இதனால் மென்பொருளை மாற்றுவதற்கு பரந்த அறிவு தேவை மொழி பெயர்ப்பை விட.இவற்றை opensource.org கையாண்டுள்ளது ஆளிகளை பயன்படுத்தி. சில சமயங்களில் (தரத்தை நிர்ணயித்தல் )மென்பொருளை விருத்தி செய்யும் குழுக்களுக்கும் ,சர்வதேச மொழிகளை தெரிந்தவர்களும்,அவ்வவ் நாடுகளின் கலாச்சரத்தை தெரிந்தவர்களும்,அத்துடன் தொழிநுட்ப அறிவு உடையவர்களும் அவசியம் தேவை. இப்படியான நபரை தெரிவு செய்வது என்பது கடினமான விடயமாகும்.
செலவுகளும்,நன்மைகளும்வியாபார ஸ்தானத்திலிருந்து பார்க்கும் போது உள்ளுர்மயபடுத்தலில் வரும் நன்மைகள் பரந்த சந்தைகளில் பயன்படுகின்றன. வியாபார ஸ்தானத்திலிருந்து உள்ளுமயமாக்கப்பட்ட பொருட்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் பாவிக்கலாம் என்பது வெளிப்படை.இதனால் இப் பொருட்களை தயாரிப்பவர்கள் அவர்களின் வரவு செலவுகளை திட்டம் செய்தல் வேண்டும்.சர்வதேச சந்தைக்கு தயாரிப்பதற்கு கூடிய செலவாகும்.ஆனால் அது உலக பொருளாதரத்தை உயர்த்தும்.மென்பொருளுக்குரிய பணத்தை கொடுக்காமல் கருப்பு சந்தையில் விற்கப்படும் உள்ளுமயமக்கப்பட்டமென்பொருள் மூலம் பொருளாதாரம் பாதிக்கப்படும். இதனால் இறுதி பாவனையாளர்களுக்கு தாங்களே உள்ளுர்மயமக்கப்பட மென்பொருளை மாற்றியமைக்ககூடிய வாய்ப்பு இல்லாமல் போகும்.இது போன்றே எல்லாவாற்றிற்கும் அடிப்படை சூழல் (open source enviornment). திறந்த மூல மென்பொருள் (open source software)![]() இது இலவசமாக திருத்தியமைக்கலாம், அதே போன்று திரும்பவும் விநியோகிக்கலாம். இது சர்வதேசமயமாதலுக்கு முக்கியமானது. இதன் மூலம் KDE செயற்திட்டம் 100 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்க்கப்பட்டது. இதன் பயன்பாட்டை மென்பொருளின் ஆரம்பகர்த்தவாகிய நபரால் அது எல்லாவற்றிற்கும் அடிப்படை மென்பொருளா அல்லது அதற்கு அனுமதி பத்திரம் தேவையா என்பது தீர்மானிக்கப்படும். உதவும் ஆதாரங்கள்
Retrieved from "http://en.wikipedia.org/wiki/Internationalization_and_localization"
|
Portal di Ensiklopedia Dunia