அதிகாரப்பூர்வமாக சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனம் என்று அழைக்கப்படும் சவுதி அராம்கோ (Saudi Aramco, அரபி: ارامكو السعودية ) சவுதி அரேபிய அரசின் தேசிய எண்ணெய் நிறுவனமாகும்.[1][2] இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு அமெரிக்க டாலர் 2 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பொதுத்துறை நிறுவனங்களில் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் அதிக மதிப்புடையதாகும்.[4][5][6][7][8]
சவுதி அராம்கோ, கச்சா எண்ணெய் இருப்பிலும் தினமும் உற்பத்தி செய்யும் அளவிலும் கணிசமான அளவில் முன்னணியில் உள்ளது. அதன் இருப்பு 260 billion barrels (4.1×1010 m3) என கணக்கிடப்பட்டுள்ளது.[9] சவுதி அரேபியாவில் உள்ள தஹ்ரானை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.[10] இந்நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி 7.9 billion barrels (1.26×109 m3),[3] மற்றும் 100 எண்ணெய் மற்றும் கேஸ் வயல்களை பராமரிக்கிறது. இத்துடன் 279 டிரில்லியன்கன அடிஇயற்கை எரிவாயுவையும் இருப்பு வைத்துள்ளது.[3] அராம்கோ இயக்கும் கவார் வயல், சாய்பா வயல் ஆகியவை உலகின் மிகப்பெரிய எண்ணெய் வயல்களாகும்.
↑ 2.02.1"Our company. At a glance". Saudi Aramco. The Saudi Arabian Oil Company (Saudi Aramco) is the state-owned oil company of the Kingdom of Saudi Arabia.
↑"Contact Usபரணிடப்பட்டது 2012-06-05 at the வந்தவழி இயந்திரம்." Saudi Aramco. Retrieved on 5 November 2009. "Headquarters: Dhahran, Saudi Arabia Address: Saudi Aramco P.O. Box 5000 Dhahran 31311 Saudi Arabia"