சாகரகன்யகா
சாகரகன்யகா (Sagarakanyaka) என்பது கேரளத்தின் சங்குமுகம் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு கடற்கன்னி சிற்பமாகும். [1] கானாயி குஞ்ஞிராமனால் செய்யப்பட்ட இது, உலகின் மிகப்பெரிய கடற்கன்னிச் சிற்பமாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. [2] இது 87 அடி நீளமும், 25 அடி உயரமும் கொண்டது. [3] குஞ்ஞிராமன் இச்சிற்பத்தை செய்து முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆனது. இறுதியில் 1992 இல் இதன் பணியை முடித்தார். [4] கண்ணோட்டம்குஞ்ஞிராமன் எந்த ஊதியமும் பெறாமல் சிற்பத்தை செய்து முடித்தார். கட்டுமான பணியின் போது, சிலை ஆபாசமாக இருப்பதாக கூறி, மாவட்ட ஆட்சியர் சிற்பத்தின் பணியை நிறுத்த உத்தரவிட்டார். [5] ஆனால், அப்போது முதலமைச்சராக இருந்த கே. கருணாகரன் இதில் தலையிட்டு, குஞ்ஞிராமனின் வேண்டுகோளின் பேரில் சிற்பத்தை கட்டி முடிக்க பரிந்துரைத்தார். [6] 2022 அக்டோபரில், இது கின்னஸ் புத்தகத்தால் உலகின் மிகப்பெரிய கடற்கன்னிச் சிற்பம் என்று இடம்பெற்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia