சாகிலேறுசாகிலேரு (Sagileru) தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் ஓடும் ஒரு நதியாகும். இது கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உருவாகி ஆந்திராவில் பாயும் பெண்ணாற்றின் ஒரு துணை நதியாகும். சாகிலேரு ஆற்றுப் பள்ளத்தாக்குசாகிலேரு ஆற்றுப் பள்ளத்தாக்கு வெலிகொண்டா மற்றும் நல்லமலா மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. வடக்கு-தெற்கு என்ற திசைகளையும் இது கொண்டுள்ளது.[1][2] ஆற்றுப் படுகையில் சிவப்பு, கருப்பு மற்றும் களிமண் வகைகளைக் கொண்டுள்ளது. ஈரமான மற்றும் உலர் பாசனப் பயிர்களான கம்பு, ராகி, சோளம், நிலக்கடலை மற்றும் காய்கறிகள் இங்கு விளைகின்றன.[3] நீர்ப்பாசனத் திட்டங்கள்மேல் மற்றும் கீழ் சாகிலேறு நீர்ப்பாசனத் திட்டங்கள் ஆற்றின் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்களாகும். இவை கடப்பா மாவட்டத்தில் பி.கோடூர் மற்றும் கலசபாடு மண்டலங்களில் அமைந்துள்ளன. இவை தவிர ஆற்றில் பல இறைவைப் பாசனமும் சில சிறு நீர்ப்பாசன வசதிகளூம் உள்ளன.[4] தெலுங்கு கங்கை கால்வாய் திட்டம், சிறீ பொடுலூரி வீர பிரம்மேந்திர சுவாமி நீர்த்தேக்கத்திலிருந்து சாகிலேறு ஆற்றுக்கு பாசனத்திற்காக தண்ணீரை திருப்பி விடுவதன் மூலம் சாகிலேறு பள்ளத்தாக்கின் பாசன திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த கால்வாயின் கட்டுமானமானது மிகவும் ஆபத்தான அரிய பறவையான ஜெர்டன் கல்குருவியின் வாழ்விடத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற அடிப்படையில் விமர்சிக்கப்பட்டது.[5][6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia