சாந்தி வில்லியம்ஸ் (Shanthi Williams) என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பல்வேறு தமிழ், மலையாளத் திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார்.[1][2]
தொழில்
சாந்தி தனது 12 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிப்புத் தொழிலுக்கு வந்தார். சாந்தி 1970 இல் வியட்நாம் வீடு படத்திலிருந்து நடிக்கத் தொடங்கினார். இவர் 1999 முதல் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்களில் இரண்டாவது முன்னணி பாத்திரம் மற்றும் துணை வேடங்களில் நடித்தார். மெட்டி ஒலி என்ற தொடரில் கட்டுப்பாடுமிக்க தாயாக நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர்.[3][4]
தமிழரசுவின் தாயாக தென்றலில் நடித்ததற்காக இயக்குநர் கே பாலச்சந்தரிடம் சிறந்த எதிர்மறை பாத்திர நடிகைக்கான விருதைப் பெற்றார். இவருக்கு இயக்குநர் மூலம் எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
↑தி இந்துNo "Mettioli" after June Monday, 25 April 2005 "Rajamma (Shanthi Williams), the traditional mother in the family, was glorified by director Thirumurugan."
↑Mythili's century[தொடர்பிழந்த இணைப்பு] "Mythili, a mega-serial being telecast on Kalaignar TV ( Mondays to Fridays at 1.30 pm) has completed its 100th episode. On the occasion, 24 sarees were given to women who had written best comments about the serial. Mythili stars Ajay, Suja, Shanthi Williams and Viji Kitty. Written and directed by S G Ali Khan, Mythili is produced by Dr Shridhar Naarayanan and Vijaya Sridhar."