சான்-டெனீ , ரீயூனியன்
சான்-டெனீ (Saint-Denis, பிரெஞ்சு உச்சரிப்பு: [sɛ̃.də.ni]) பிரான்சினால் வெளிநாட்டு நிருவாகப் பகுதியாக நிருவகிக்கப்படும் ரீயூனியனின் நிருவாகம் சார்ந்த தலைநகர் ஆகும். இது, இந்தியப் பெருங்கடலிலுள்ள ரீயூனியன் தீவின் வடக்குப் பகுதியில் சான்-டெனீ ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. 1663ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நகரம் மிகவும் மெதுவாகவே வளர்ந்தது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஏற்பட்ட கிராமப்புற திரள் வெளியேற்றத்தினால் அதிகளவு மக்கள் இங்கு குடியேறினர். முன்னர் ரீயூனியனின் முக்கியத் துறைமுகமாக இந்நகரம் விளங்கியது; ஆயினும் இங்கு நிலவிய ஊகிக்க முடியாத காற்று மற்றும் கடல்நீர் மட்ட ஏற்ற இறக்கத்தினால் ஏற்பட்ட சிரமங்களால், 1880களிலிருந்து அருகிலிருக்கும் செயற்கைத் துறைமுகமான ல போர்ட் (பிரெஞ்சு மொழியில்: துறைமுகம்) சான்-டெனீயிற்கு மாற்றாக விளங்கிவருகிறது. அழகிய கடற்கரை நெடுக அமைந்துள்ள 20 கி.மீ. சாலையானது ல போர்டையும் செயிண்ட் டெனிசையும் இணைக்கின்றது. ஒரு சர்வதேச விமானநிலையம், நூலகங்கள், ஒரு இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் சட்டம், பொருளியல், ஆட்சி இயல் ஆகியவற்றைக் கற்பிக்கும் ஒரு பல்கலைக்கழகமும் இங்குள்ளன.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia