சான் பிரான்சிஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
சான் பிரான்சிசுக்கோ அரசுப் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிசுக்கோவில் உள்ளது. இது கலிபோர்னியா அரசுப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இங்கு 118 இள நிலைப் பாடப்பிரிவுகளும், 94 முது நிலைப் பாடப் பிரிவுகளும், 5 முனைவர் பாடங்களும் கற்பிக்கின்றனர்.[5][6][7] கல்விஇங்கு உருவாக்கக் கலை, வணிகம், கல்வி, இனங்கள், நலவாழ்வு, அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு பாடப்பிரிவுகளைப் படிக்கின்றனர். அங்கீகாரம்இதை பல்கலைக்கழகத்திற்கான அங்கீகார ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த ஆணையம் மேற்கத்திய பள்ளி மற்றும் கல்லூரிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்தது.[8] வளாகம்மாணவர்களுக்கான உணவு விடுதியும், கருத்தரங்கக் கூடங்களும் உள்ளன. விளையாட்டுஇங்கு பேஸ்பால், கால்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்ட 11 விளையாட்டுகளை விளையாடுகின்றனர். இங்குள்ள குழுக்கள் கலிபோர்னியா மாகாண அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர். இங்கு படித்த 3 மாணவர்கள் பெரிய அளவிலான பேஸ்பால் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இங்கு படித்த 13 மாணவர்கள் தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். குத்துச்சண்டைப் பிரிவிலும் மாணவர் குழுக்கள் உண்டு. நாற்பது ஆண்டுகளாக, குத்துச்சண்டை விளையாட்டில் தேசிய அளவிலான வெற்றிக் கோப்பையைப் பெற்றுள்ளனர். சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia