சாபுரா, சாபுரா மாவட்டம்
சாபுரா (Shahpura), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 17 ஆகஸ்டு 2023 அன்று நிறுவப்பட்ட சாபுரா மாவட்டத்தின்[1] நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது பில்வாரா நகரத்திற்கு வடக்கே 49 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜெய்ப்பூருக்கு தெற்கில் 236 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 25 வார்டுகளும், 5,671 குடியிருப்புகளும் கொண்ட ஷாபுரா நகரத்தின் மக்கள் தொகை 30,320 ஆகும். அதில் ஆண்கள் 15,279 மற்றும் 15,041 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 984 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 77.84 % ஆகும். இந்நகர மக்களில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 19.29 % மற்றும் 2.66 % ஆக உள்ளனர்.இந்து சமயத்தினர் 79.83%, இசுலாமியர் 18.36%, சமணர்கள் 1.71% மற்றும் பிறர் 0.10% ஆக உள்ளனர்.[2] படக்காட்சிகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia