சாபு சிரில்
சாபு சிரில் என்பவர் திரைப்படக் கலை வடிவமைப்பாளர் ஆவார்.[1] மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். தேசியத் திரைப்பட விருது 4 முறையும் சிறந்த கலை இயக்கத்துக்காக பிலிம்பேர் விருது 5 முறையும் பெற்றார். வால்பாறையில் பிறந்த சாபு சிரில் பள்ளிக் கல்வியை அங்கேயே முடித்துவிட்டு சென்னையில் கவின் கலைக்கல்லூரியில் படித்தார். 1982 முதல் 1988 வரை தனிப்பட்ட முறையில் பெரிய குழுமங்களான வெல்கம் ஓட்டல், தாஜ் கோராமண்டல், மதுரா கோட்ஸ் போன்ற நிறுவனங்களில் வடிவமைப்புத் தொழில் செய்தார். 1988 முதல் கலைத்துறை இயக்கத்தில் ஈடுபடத் தொடங்கினார். 2500 விளம்பரப் படங்களும் 3 தொலைக்காட்சித் தொடர்களும் இவரால் இயக்கப்பட்டன. ஹே ராம், அசோகா, சிட்டிசன், ரெட்,வில்லன்,பாகுபலி, எந்திரன், ஓம் சாந்தி ஓம் ஆகிய மிகப் பெரிய படங்களில் இவர் பணி செய்தார்.[2] மேற்கோள் |
Portal di Ensiklopedia Dunia