சாமி சிதம்பரம்
சாமி சிதம்பரனார் என்று பரவலாக அறியப்பட்ட சாமி. சிதம்பரம் (திசம்பர் 1, 1900 – சனவரி 17, 1961) ஒரு தமிழ் இதழாளர், எழுத்தாளர் மற்றும் திராவிட இயக்க செயல்பாட்டாளர். பிறப்புசாமி சிதம்பரம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கடக்கம் எனும் சிற்றூரில் பிறந்தார். இவரது பெற்றோர் - சாமிநாத மலையமான் - கமலாம்பாள் அம்மையார். கல்வி1923ல் “பண்டிதர்” பட்டம் பெற்றார். ஆசிரியர்கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் முதலில் தமிழாசிரியரகப் பணியாற்றினார். பின்னர் அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்த பின்வரும் மாவட்டக்கழக உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்:
திருமணம்5 மே 1930 அன்று சிவகாமி என்னும் கைம்பெண்ணை சுயமரியாதைத் திருமண முறையில் மணம் புரிந்தார்.[2] இத்திருமணம் பெரியார் ஈ. வே. ராமசாமியின் சொந்த ஊரான ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டுப் பந்தலில் நடந்தது. சுயமரியாதை இயக்கத்தினர்பெரியார் ஈ. வே. ராமசாமியின் கொள்கைகளால் கவரப்பட்டு அவரது சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். பெரியார் 1929-30ல் மலேசியா சென்ற போது சிதம்பரமும் உடன்சென்றார். 1932ல் ஐரோப்பியப் பயணத்திலிருந்து திரும்பிய பெரியார் ம. சிங்காரவேலுவின் பொதுவுடைமை சிந்தனைகளால் கவரப்பட்டு சுயமரியாதை இயக்கத்தை ஒரு பொதுவுடைமைக் கட்சியாக மாற்ற நினைத்த போது அதனை எதிர்த்தார். எஸ். ராமனாதனும் சிதம்பரத்துடன் சேர்ந்து எதிர்த்ததால் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை மாற்றாமல் தனியே சுயமரியாதை சமதர்மக் கட்சி என்ற பெயரில் தனியே ஒரு கட்சியைத் தொடங்கினார். 1940களில் பெரியாருடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாட்டால் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறினார். திராவிட இயக்கம் முன்வைத்த திராவிட-ஆரிய முரண் கொள்கையை மறுத்து இருவரும் ஒரே இனம் என்ற கருத்தை வலியுறுத்தினார். இதழாளர்சிதம்பரம் 1930களில் ஆண்டுகளுக்கு திராவிட/சுயமரியாதை இயக்க இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பகுத்தறிவு, புரட்சி, குடியரசு, திராவிடன், விடுதலை அவற்றுள் சில. இவை தவிர தினமணி, வெற்றிமுரசு, சரஸ்வதி ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ளார். 1936-38 காலகட்டத்தில் அறிவுக்கொடி என்னும் பத்திரிக்கையை கும்பகோணத்தில் நடத்தினார். 1950களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழான ஜனசக்தி யில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். ஆய்வுக்கருத்துகள்
படைப்புகள்சிதம்பரம் மாணவர்களுக்கான் பாடநூல்கள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், இலக்கிய ஆய்வு நூல்கள் என சுமார் அறுபது நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில:
சான்றடைவு
உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia