சாம்பல் நெற்றிப் புறா

சாம்பல் நெற்றிப் புறா
இலங்கை கத்துலா தேசிய பூங்காவில் இலங்கை பச்சைப் புறா (ஆண்)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
தெரெரான்

சாம்பல் நெற்றிப் புறா (Pompadour Green– Pigeon, Treron pompadora) தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு சிற்றினக் குழுவாகும்.

சிற்றினக் குழு

பல வகைப்பாட்டியலாளர்கள் பாம்படோர் பச்சை புறாவினை பல சிற்றினங்களாகப் பிரித்துள்ளனர், இவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:[2][3]

படம் பொதுப் பெயர் அறிவியல் பெயர் பரவல்
இலங்கை பச்சை புறா தெரெரான் பம்பாதோரா இலங்கை
சாம்பல் நெற்றி பச்சைப் புறா தெரெரான் அபினிசு இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலை
அந்தமான் பச்சைப் புறா தெரெரான் குளோராப்டெரசு அந்தமான் மற்றும் நிக்கோபார்
சாம்பல்-தலை பச்சைப் புறா தெரெரான் பாயெரெ வடகிழக்கு இந்தியா மற்றும் நேபாளம், கிழக்கு சீனாவின் யுனான் மற்றும் தெற்கே இந்தோனேசியா (கிராவின் இஸ்த்மஸின் வடக்கு)
பிலிப்பீன்சு பச்சைப் புறா தெரெரான் ஆக்சிலாரிசு பிலிப்பீன்சு
புரு பச்சைப் புறா தெரெரான் அரோமாடிகசு இந்தோனேசியா தீவு, புளோரசு கடல் மற்றும் புரு

உடலமைப்பு

இந்தப் புறாக்களின் உடல் நீளம் சுமார் 28 செ. மீ. வரை இருக்கும். சாம்பல் நிறத்தலையும், நெற்றியும் செம்பழுப்பு நிற முதுகும் பசுமை தோய்ந்த மார்பும் ஆலிவ் பழுப்பான வாலிறகுகளும் கொண்டவை இவை. பெண் பறவையின் முதுகு செம்பழுப்புக்குப் பதிலாக ஆலிவ் தோய்ந்த பச்சையாக இருக்கும்.

காணப்படும் பகுதிகள்

இது இந்தியா, இலங்கை, பிலிப்பீன்சு மற்றும் மொலுக்காஸ் வரை வெப்பமண்டல தெற்காசியாவின் காடுகளில் பரவலாக காணப்படும் குழுவாகும். இந்தியாவில், இவை மேற்குத் தொடர்ச்சி மலைகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் சில பகுதிகள், வடகிழக்கு இந்தியா மற்றும் அந்தமான் தீவுகளில் பிரிக்கப்பட்ட குழுக்களாக காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில் சமதரை முதல் 1200 மீ வரை பசுங்காடுகளைச் சார்ந்து மரங்கள் பழுக்கும் பருவத்திற்கேற்ப இருப்பை மாற்றிக்கொண்டு திரியக் காணலாம். காபித் தோட்டங்களில் காணப்படும் இது அங்கு அமைந்துள்ள சுண்ணாம்பு பூசப்பட்ட பங்களாக்களின் சுவர்களில் முட்டி மோதி இறப்பது அடிக்கடி நிகழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு

10 முதல் 12 வரையான குழுவாக அத்தி, ஆல், சூரை முதலான மரங்களில் பழங்களைத் தேடித் தின்னும். காலையிலும் மாலையில் அடைவதற்கு முன்னும் காடுகளின் எல்லையில் நிற்கும் பெரிய மரங்களின் இலைகளற்ற நுனிக்கொம்புகளில் கூட்டமாக அமர்ந்து இனிய சீழ்க்கைக் குரல் கொடுக்கும் பழக்கம் கொண்டது.

இனப்பெருக்கம்

டிசம்பர் முதல் மார்ச் முடிய நடுத்தரமான மரங்களில் குச்சிகளால் மேடை அமைப்பில் கூடமைத்து 2 முட்டைகள் இடும்.[4]

மேற்கோள்கள்

  1. "Treron pompadora". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2010.4. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2009. Retrieved 18 November 2010. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Gill, F., and D. Donsker (Eds). 2010. IOC World Bird Names. Version 2.6. Accessed 18 November 2010.
  3. Rasmussen, P.C. & J.C. Anderton. 2005. Birds of South Asia: the Ripley guide. 2 vols. Lynx Edicions, Barcelona.
  4. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:65
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya