சாய்செவ்வகம்![]() இருபரிமாண வடிவவியலில் வழக்கமாக சாய்செவ்வகம் (rhomboid) என்பது சமமில்லா அடுத்துள்ள பக்கங்களையும் சாய்கோணங்களையும் கொண்ட ஒரு இணைகரமாகும். ஒரு இணைகரத்தின் நான்கு பக்கங்களும் சமமாக இருந்தால் அது ஒரு சாய்சதுரம், ஆனால் சாய்செவ்வகம் அல்ல. செங்கோண மூலைகள் கொண்ட இணைகரம் ஒரு செவ்வகம், ஆனால் சாய்செவ்வகம் அல்ல. பெரும்பாலும் ராம்பாய்ட் என்ற சொல் இணைகரத்திண்மத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. சில படிகங்கள் முப்பரிமாண சாய்செவ்வக வடிவில் உள்ளன. இவை சாய்சதுர பட்டகங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. அறிவியலில், சாய்செவ்வகம் என்ற வார்த்தை இரு மற்றும் முப்பரிமாண பயன்பாடு கொண்டுள்ளது. யூக்ளிடு, அவரது எலிமெண்ட்ஸ் புத்தகம் I, வரையறை 22 -ல் இச்சொல்லை அறிமுகப்படுத்தியுள்ளார்.
யூக்ளிட் சாய்செவ்வகத்தின் வரையறையைப் பின்பு வேறு எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தவில்லை. புத்தகம் I, கூற்று 31 -ல் இணைகரம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியிருக்கிறார்; " இணைகரப் பரப்புகளில் எதிர்ப் பக்கங்கள் சமமாகவும் எதிர் கோணங்கள் சமமாகவும் அமையும்; மற்றும் விட்டம் பரப்பை இருசமக்கூறிடும்." ஹீத்தின் கருத்தின்படி சாய்செவ்வகம் என்பது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஒரு பழமையான சொல். சமச்சீர்கள்சாய்செவ்வகத்திற்கு சமச்சீர் அச்சுக்கோடுகள் கிடையாது. ஆனால் வரிசை 2 கொண்ட சுழற்சி சமச்சீர் உண்டு. உயிரியலில்உயிரியலில், சாய்செவ்வக வடிவ தசைகள், இலைகளில்[2] அல்லது தலைக்காலிகளில்[3] காணப்படும் இருபக்க சமச்சீர்மை கொண்ட பட்டவடிவ அல்லது சாய்சதுர வடிவ சுற்றுக்கோடு ஆகியவற்றை விளக்க சாய்செவ்வக வடிவ கருத்து பயன்படுகிறது. வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia