பிரவுன் பல்கலைக்கழகம்
கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம்
அறியப்படுவது
HiRISE
செவ்வாய் 2020
சாரா மில்கோவிச்(Sarah Milkovich) தாரைச் செலுத்த ஆய்வகத்தின் செவ்வாய் 2020 தரையூர்தியியக்க முன்னணி அறிவியலாளர் ஆவார். இவர் செவ்வாய் வெள்ளோட்ட வட்டணைக்கலத்தின் இரிசே(HiRISE) ஒளிப்படக் கருவியின் முதன்மை ஆய்வாளர் ஆவர்.
கல்வி
மில்கோவிச் நியூயார்க்கில் உள்ள இதக்காவில் வளர்ந்தார்.[1] இங்கு இவ்ர் வடக்கு மின்னசோட்டாவில் விடுமுறையில் இருந்தபோது நோவா, பி பி எசு விண்கலங்களைத் தொலைக்காட்சியில் பார்த்து வனியலில் ஆர்வம் கொண்டுள்ளார்.[2][3] இவர் தன் பெற்றோருடன் பெர்செய்ட்சு விண்கல் பொழிவைக் கண்டுள்ளார்.[3] இவர் பிலிப்சு எக்சீட்டர் கல்விக்கழகத்தில் படித்து 1996 இல் பள்ளிக்கல்வி முடித்தார்.[4] இவர் பள்ளியில் படித்துகொண்டிருந்தபோதே நியர்சூமேக்கர் விண்கலப்பணியில் களப்பயிற்சி பெற்றுள்ளார்.[3] இவர் 2000 இல் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பயின்று கோள் அறிவியலில் இளவல் பட்டம் பெற்றார்.[5] பிறகு இவர் பிரவுன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கு கோள் நிலவியலில் முதுவர், முனைவர் பட்டங்களை 2005 இல் பெற்றுள்ளார்.[5][6]
வாழ்க்கைப்பணி
இவ்ர் தன் முனைவர் பட்டம் முடித்தவுடனே நாசாவின் தாரைச் செலுத்த ஆய்வகத்தில் சேர்ந்தார்.[7] இங்கு இவர் செவ்வாய் போனிக்சு தரையிறங்கும் விண்கலத்திலும் காசினி-ஐகன்சு இலக்குத் திட்டத்திலும் செவ்வாய் வெள்ளோட்ட வட்டணைக்கலத்திலும் பணிபுரிந்தார்.[7] இவர் தன் முதல் தரையூர்தியான கியூரியாசிட்டியின் இரிசே ஒளிப்படக்கருவி வழியாக உயர்பிரிதிற படம்பிடித்தலை வடிவமைப்பதில் பொறுப்பெடுத்துகொண்டார்.[2][8] இவர் செவ்வாய் அறிவியல் ஆய்வக வான்குடை கியூரியாசிட்டியின் தரையிறக்கத்தைப் படத்தை எடுத்தமைக்காக பெருமைப்படுகிறார்.[9][10][11][12][13][14] இரிசே கருவி இவரும் இவரது அறிவியலாலர்களும் படங்கள் எடுக்கவேண்டிய இடங்களைத் தெரிவுசெய்யவும் இதற்காக பொதுமக்களின் பரிந்துரைகளைப் பெறவும் பெரிதும் ஒத்துழைத்தது.[15] இவர் நாசாவின் சார்பில் கியூரியாசிட்டி வளர்ச்சிகளை C-SPAN தொலைக்காட்சியில் தோன்றி விளக்கினார்.[16][17]
இவர் தாரைச் செலுத்த ஆய்வகத்தின் செவ்வாய் 2020 தரையூர்தியியக்க முன்னணி அறிவியல் அமிப்புகளின் பொறியாளர் ஆவார்.[18] இந்தத் தரையூர்தியின் அடக்கச் செலவு 2 பில்லியன் டாலர் ஆகும்.[19]
இவர் அறிவியல் காணொளிக் காட்சிகளிலும் குறும்படக் காட்சிகளிலும் அடிக்கடி தோன்றுகிறார்.[20][21][22][23] இவர் பள்லிகளுக்குச் சென்று அடுத்த தலைமுறை அறிவியலாளர்களுக்கும் பொறியியலாலர்களுக்கும் ஆர்வமூட்டும் உரைகளை ஆற்றுகிறார்.[7][24][25][26][27] இவர் 2016 இலும் 2018 இலும் டிரேகன்கன் கருத்தரங்கில் முதன்மைப் பேச்சாளர் ஆவார்.[28][29]