சாரிட்டி ஆடம்ஸ் எர்லி

லெப். கர்னல்

சாரிட்டி ஆடம்ஸ்
பிறப்பின்போதான் பெயர்சாரிட்டி எட்னா ஆடம்ஸ்
பிறப்புடிசம்பர் 5, 1918
கிட்ரெல், வட கரொலைனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்புசனவரி 13, 2002(2002-01-13) (அகவை 83)
டேட்டன், ஒகையோ, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
அடக்கம்
உட்லாண்ட் கல்லறை
சார்பு ஐக்கிய அமெரிக்கா
சேவை/கிளை
சேவைக்காலம்1942 − 1946
தரம்லெப்டின்ட் கர்னல்
படைப்பிரிவுடெஸ் மொய்ன்ஸ் தற்காலிக இராணுவ அதிகாரி பயிற்சிப் பள்ளி
கட்டளை6888வது மத்திய அஞ்சல் படைப்பிரிவு
விருதுகள்
துணை(கள்)
ஸ்டான்லி ஏ. எர்லி (தி. 1949)

சாரிட்டி ஆடம்ஸ் எர்லி (Chratie Adams Earley, டிசம்பர் 5,1918-ஜனவரி 13,2002) ஓர் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை அதிகாரி ஆவார். மகளிர் இராணுவத் துணைப் படையில் (பின்னர் மகளிர் இராணுவப் படை என மாற்றப்பட்டது) அதிகாரியாக ஆன முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்மணியான இவர், இரண்டாம் உலகப் போரின்போது வெளிநாடுகளில் பணியாற்றிய ஆப்பிரிக்க- அமெரிக்கப் பெண்களைக் கொண்ட 6888வது மத்திய அஞ்சல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்தார். போர் முடிந்தபோது இராணுவத்தில் மிக உயர்ந்த பதவியில் இருந்த ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்ணாக ஆடம்ஸ் இருந்தார்.

இவரைக் கௌரவிக்கும் வகையில் நவம்பர் 30, 2018 அன்று வர்ஜீனியாவின் லீ துறைமுகத்தில் (அப்போது அப்படித்தான் அழைக்கப்பட்டது) ஒரு நினைவுச்சின்னம் அர்ப்பணிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் ஏர்லி மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் ஆர்தர் ஜே. கிரெக்கின் நினைவாக இந்தத் தளம் “கிரெக்-ஆடம்ஸ் துறைமுகம்” என மறுபெயரிடப்பட்டது. இது ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் பெயர்களைக் கொண்ட முதல் அமெரிக்க இராணுவத் தளமாகும்.

ஐரோப்பாவில் தங்கள் சேவையின் போது 6888 வது மத்திய அஞ்சல் படைப்பிரிவின் அனுபவத்தைக் காட்டும் 2024 ஆம் ஆண்டு வெளியான தி சிக்ஸ் டிரிபிள் எய்ட் என்ற திரைப்படத்தில் கெர்ரி வாசிங்டன் ஒரு முக்கியக் கதாபாத்திரமாகச் சித்தரிக்கப்படுகிறார்.

தொழில் வாழ்க்கை

ஆடம்ஸ் , அமெரிக்க இராணுவத்தின் மகளிர் இராணுவத் துணைப் படையில் ஜூலை 1942 இல் சேர்ந்தார்.[1] அதில் இவர் ஒரு அதிகாரியாக இருந்த முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்ணாக இருந்தார். அந்த நேரத்தில், அமெரிக்க இராணுவத்தில் ஆபிரிக்க அமெரிக்கர்கள் பிற இனத்தவரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர். எனவே இவர் சக பெண் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண் படையினருடன் அயோவாவின் டெஸ் மொயின் துறைமுகத்திலிருக்கும் இராணுவத் தளத்தில் நிறுத்தப்பட்டார். 1943 ஆம் ஆண்டில், தலைமையகத்தில் பயிற்சி மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.

1944 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பெண் இராணுவ வீரர்களின் திறனை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் பயிற்சி மையக் கட்டுப்பாட்டு அதிகாரியாக ஆடம்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டார். நில அளவை அதிகாரி (இழந்த சொத்தைக் கண்டறிதல்) மற்றும் நீதிமன்ற அதிகாரி (பெண்களின் சிறு குற்றங்களைக் கையாளுதல்) போன்ற வழக்கமான கூடுதல் கடமைகளையும் இவர் கொண்டிருந்தார்.[1]

1944 டிசம்பரில், ஆடம்ஸ் வெளிநாடுகளில் பணியாற்றிய ஒரே கறுப்பின மகளிர் இராணுவ துணைப் படையினை வழிநடத்தினார். அவர்கள் இங்கிலாந்தின் பர்மிங்காமில்ம் முகாமிட்டிருந்தனர். இவர்கள் பொதுமக்களுடன் பழகத் தொடங்கினர். மேலும் இரு தரப்பிலும் உள்ள தப்பெண்ணங்களை உடைத்தனர். ஆடம்ஸ் ஒரு அஞ்சல் அடைவு சேவை பிரிவின் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இந்த நேரத்தில் பெண்களின் மன உறுதியை உயர்த்துவதையும் ஒரு பணியாகக் கொண்டிருந்தார். பெண்கள் ஓய்வெடுக்கவும், பழகவும் அழகு நிலையங்களை உருவாக்குவதன் மூலம் ஆடம்ஸ் இதைச் சாதித்தார்.[2]

ஜனவரி 1945 இல், ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்களின் முதல் படைப்பிரிவான 6888 வது மத்திய அஞ்சல் அடைவு படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டார். அவர்கள் முதலில் இங்கிலாந்தின் பர்மிங்காமின் புறநகர்ப் பகுதியான எட்ஜ்பாஸ்டனில் தங்கியிருந்தனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர்கள் பிரான்சின் ரூயனுக்கும் பின்னர் பாரிஸுக்கும் மாற்றப்பட்டனர்.[3] இரண்டாம் உலகப் போரின் போது சிப்பாய்களுக்கு மில்லியன் கணக்கான அஞ்சல்களை வழங்குவதற்கு இவர்கள் பொறுப்பேற்றனர்.[4]

போர் முடிவடைந்தபோது, லெப்டினன்ட் கர்னல் ஆடம்ஸ் இராணுவத்தில் மிக உயர்ந்த தரவரிசை கொண்ட ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்ணானார்.[5] போரின் முடிவில், இவரது சாதனைகள் குறித்துக் கேட்டபோது, ஆடம்ஸ் வெறுமனே “நான் எனது வேலையை மட்டுமே செய்ய விரும்பினேன்” எனப் பதிலளித்தார்.[1] பிறகு, 1946 இல் தனது கல்வியைத் தொடர இவர் இராணுவச் சேவையை விட்டு வெளியேறினார்.[3]

சொந்த வாழ்க்கை

1949 ஆம் ஆண்டில், சாரிட்டி ஆடம்ஸ் இளைய ஸ்டான்லி ஏ. எர்லி என்பவரை மணந்தார். இவர்கள் சுவிட்சர்லாந்துக்குக் குடிபெயர்ந்தனர். அதே நேரத்தில் ஸ்டான்லி மருத்துவப் பள்ளியை முடித்தார். பின்னர், இவர்கள் 1952 இல் அமெரிக்காவிற்குத் திரும்பி, டேட்டனில் குடியேறினர், அங்கு ஸ்டான்லி ஒரு மருத்துவராகப் பணியாற்றினார்.[1] இவர்களுக்கு மூன்றாம் ஸ்டான்லி மற்றும் ஜூடித் எர்லி என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

ஆடம்ஸ் தனது 83 வயதில் ஜனவரி 13,2002 அன்று டேட்டனில் இறந்தார்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 Botsch, Carol Sears (June 10, 2002). "Charity Edna Adams Earley". University of South Carolina Aiken. Archived from the original on March 18, 2018. Retrieved March 18, 2018.
  2. BHS (10 September 2014). "Charity Adams Earley Biography". Black History Now. Archived from the original on February 3, 2015. Retrieved May 12, 2015.
  3. 3.0 3.1 BHS (10 September 2014). "Charity Adams Earley Biography". Black History Now. Archived from the original on February 3, 2015. Retrieved May 12, 2015.
  4. Bellafaire, Judith A. (February 17, 2005). "The Women's Army Corps: A Commemoration of World War II Service". U.S. Army Center of Military History. CMH Publication 72-15. Archived from the original on March 4, 2021. Retrieved March 18, 2018.
  5. Quigley, Samantha L. (March 27, 2009). "Veterans Affairs Honors Military Women of Past, Present". U.S. Department of Defense. Archived from the original on September 24, 2015.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya