சார்ல்ஸ் அன்ரனி

சார்ல்ஸ் அன்ரனி (Charles Anthony) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூத்த மகனும் ஆவார்[1].

பெயர்க் காரணம்

தனது இயக்கத்தின் படைத் தளபதிகளுள் ஒருவரான சார்ல்ஸ் அன்ரனி சீலனின் நினைவாக தனது மகனுக்கு சார்ல்ஸ் அன்ரனி என பிரபாகரன் பெயரிட்டார்[2].

கல்வி

உயர்கல்வி பயில அயர்லாந்துக்கு அனுப்பப்பட்ட சார்ல்ஸ் அன்ரனி, வானூர்திப் பொறியியலில் பட்டம் பெற்றார்.

ஈழப் போராட்டப் பங்களிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொழில்நுட்பப் பிரிவிற்கும், வான் புலிகள் பிரிவிற்கும் இவர் தலைமை தாங்கியதாக நம்பப்பட்டது.

இறப்பு

2009 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த இறுதிக்கட்டப் போரில் சார்ல்ஸ் அன்ரனி கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் 2009 மே 18, அன்று அறிவித்தது.[3].

மேற்கோள்கள்

  1. "SL govt releases picture of Charles Anthony Prabhakaran". indiatodayin. 7 மே 2009. Retrieved 25 நவம்பர் 2014.
  2. "Passport for Prabakaran's son?". தி இந்து. 26 February 2003. Retrieved 25 Navember 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Most of LTTE top brass killed: Army". தி இந்து. 19 மே 2009. Retrieved 25 நவம்பர் 2014.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya