சாவித்திரி (பெண்)
![]() ![]() சாவித்திரி இந்து தொன்மக் கதைகளில் வரும் ஒரு பெண். மத்திர நாட்டின் மன்னர் அசுவபதியின் மகள். எதிரிகளிடம் நாட்டை பறிகொடுத்த சால்வ நாட்டு மன்னன் துயுமத்சேனனின் மகனான ஒரு வருடமே உயிர்வாழக் கூடிய சத்தியவான் என்னும் ஏழை விறகு வெட்டியைத் திருமணம் செய்து கொண்டவள். சாவித்திரியின் கதைபிறப்புபரத கண்டத்தில் செல்வச் செழிப்புடன் ஒரு தேசம் சிறந்து விளங்கியது. மத்ரா நாடே அந்த தேசமாகும். அந்த நாட்டை அசுவபதி என்ற மன்னன் சீரும் சிறப்புமாக ஆண்டுவந்தார். அசுவபதி உத்தமன். அவனுக்கு ஒரு வருத்தம் இருந்தது. நல்ல முறையில் நாட்டை ஆண்டு வந்தாலும் தனக்கென்று வாரிசு இல்லையே என்பதே அவனுடைய வருத்தம். பல புண்ணியத் தீர்த்தங்களுக்குச் சென்று நீராடி, கடுமையான விரதங்களையும் மேற்கொண்டான். கடைசியில் குழந்தைப் பேற்றிற்காகப் பதினெட்டு ஆண்டுகள் சாவித்திரிதேவியை வேண்டி வணங்கி வந்தான். சாவித்திரி மந்திரத்தைச் சொல்லி இலட்சம் ஆகுதிகளைச் செய்தான். பதினெட்டாம் ஆண்டில் அசுவபதியின் விரதத்தில் சாவித்திரிதேவி மகிழ்ந்து அவன் முன் தோன்றினாள். ‘அசுவபதியே! உனக்கு வேண்டியது என்ன? கேள். தருகிறேன்’ என்றாள். உடனே அசுவபதி, “தேவி! என் வம்சம் தழைக்கும் பொருட்டு, குழந்தைகள் பல பிறக்க வேண்டும்” என்றான். அசுவபதியின் எதிர்காலத்தை அறிந்திருந்த சாவித்திரிதேவி, ‘அரசே! உனக்கு ஒரு அழகானபெண் குழந்தை பிறக்கும். இதற்கு மேல் எதையும் கேட்காதே! பிரம்மதேவர் உனக்கு எழுதி வைத்திருப்பது போல் நடக்கும்” என்று கூறி மறைந்தாள். சாவித்திரிதேவி கூறியதைப் போன்று, அசுவபதியின் மனைவிக்கு அழகும் அறிவுமுடைய பெண் குழந்தை பிறந்தது. சாவித்திரி அருளால் குழந்தை பிறந்தமையால் அந்தணர்கள் குழந்தைக்குச் ‘சாவித்திரி’ என்று பெயரிட்டனர். |
Portal di Ensiklopedia Dunia