சிக்கிம் அரசு சின்னம்
சிக்கிம் அரசு இலச்சினை, காம்-சம்-வுங்குடு என்றும் அழைக்கப்படுகிறது (Emblem of Sikkim, also called Kham-sum-wangdue (Sikkimese: ༄༅།ཁམས་གསུམ་དབང་འདུས།), சிக்கிம் அரசின் இலச்சினையாக பயன்படுத்தப்படுகிறது. இது 1877 இல் ராபர்ட் டெய்லரால்[disambiguation needed] ஐரோப்பிய பாணியில் வடிவமைக்கப்பட்டது மற்றும் சிங்கிம் முடியாட்சியின் கடைசி காலத்துக்கு முன்பு பயன்படுத்த தொடங்கப்பட்டது.[1] பருந்துப் பார்வைநடுவில் உள்ள கேடயத்தை ஐரோப்பிய டிராகன்கள் தாங்கி இருப்பதுபோலவும், கேடயத்தில், பௌத்த கொர்லோ பிரார்த்தனை சக்கரத்தைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள தலைக்கவசத்தில் பௌத்த அஷ்டமங்களப் பொருட்களைக் கொண்டதாக உள்ளது. இந்த சின்னத்தில் திபெத்திய சொற்களான காம்-சம்-வங்டு, அதாவது "மூன்று உலகங்களின் வெற்றி" என்று பொருள்படும் சொற்றொடர் உள்ளது.[2] சிக்கிம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு, முடியாட்சி ஒழிக்கப்பட்ட பிறகு, சிக்கிமின் கொடி அதன் அதிகாரப்பூர்வ நிலையை இழந்தது, ஆனால் சின்னம் தக்கவைத்துக்கொள்ளப்பட்டது. மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia