சிங்கப்புலி (விலங்கு)
சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) என்பது ஆண் சிங்கம் (Panthera leo) மற்றும் பெண் புலி (Panthera tigris) இவைகளுக்கிடையே ஒரு கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாகிய கலப்பு உயிரினமாகும். இவ்வினத்தின் பெற்றோர்கள் பந்தேரா எனும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை, ஆனால் அவற்றின் இனங்களோ வேறுபட்டவையாக உள்ளது. அறியப்பட்ட அனைத்து பூனைகுடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாக சிங்கப்புலி உள்ளது.[1] கிட்டத்தட்ட இவற்றைப்போலவே கலப்பினச்சேர்க்கை மூலம் தோன்றிய புலிச்சிங்கம் எனும் விலங்கில் இருந்து சிங்கப்புலி வேறுபட்டுள்ளது. ஆண் புலியும் பெண் சிங்கமும் இணைந்த கலப்பினமே புலிச்சிங்கம் ஆகும். சிங்கப்புலிகள் நீச்சல் புரிவதை விரும்புகின்றன; இது புலியின் ஒரு பண்பு ஆகும், அதேவேளையில் கூடிப் பழகும் இயல்பு மிக்கவையாக உள்ளன; இந்தப்பண்பு சிங்கத்துக்கு உரித்ததாகும். கேர்க்குலிசு எனும் சிங்கப்புலி உலகிலேயே மிகப்பெரிய, வாழும் பூனை என்று கின்னசுச் சாதனை நூலில் இடம்பெற்றுள்ளது. ![]() மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia