சிங்களாந்தபுரம்
![]() சிங்களாந்தபுரம் (ஆங்கிலம்: Singalandapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இங்கு வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. மக்கள் வகைப்பாடுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,422 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 5345 ஆண்கள், 5077 பெண்கள் ஆவார்கள். இதில் மக்களின் சராசரி கல்வியறிவு 61.53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சிங்களாந்தபுரம் மக்கள் தொகையில் 11.78% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். புவியியல்சிங்களாந்தபுரத்தில் பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பநிலை 39.1˚ செல்சியஸ், குறைந்த வெப்பநிலை 16.8˚ செல்சியஸ்.இவ்வூரின் அமைவிடம் 11°25'3"N 78°13'18"E ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 245 மீட்டர் (805அடி) உயரத்தில் இருக்கின்றது. பருவமழைதென்கிழக்கு பருவமழையும், முக்கியமாக வடமேற்கு பருவமழையும் நகருக்கு மழை கொண்டு வருகிறது. சிங்களாந்தபுரத்தில் வெப்பமும் ஈரப்பதமும் வருடம் முழுவதும் மிகுந்து காணப்படுகிறது. ஏற்காடு சிங்களாந்தபுரத்திலிருந்து 75 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொல்லிமலை சிங்களாந்தபுரத்திலிருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கலாசாரம்சிங்களாந்தபுரத்தில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சிங்களாந்தபுரத்தின் கலாசாரம் விளங்குகிறது.அலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் தமிழ் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது. ஊரின் சந்தைப்பேட்டையில் உள்ள நவகண்ட சிற்பம் 4 அடி உயரமுள்ளது. வலக்கை பாதி ஒடிந்த நிலையிலும், இடது கையால் கத்தியைக்கொண்டு அரிந்து கொள்வது போலவும் உள்ளது. போக்குவரத்துசிங்களாந்தபுரம் நகரிலிருந்து மற்ற நகரங்களுக்கு சென்று வர நல்ல சாலை வசதிகள் உள்ளன. சிங்களாந்தபுரத்துக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது தொலைபேசி நிறுவனங்கள்இங்கு பி.எஸ்.என்.எல், டாடா இண்டிகாம், ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகிய தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு அளிக்கின்றன. மற்ற இந்திய நகரங்களைப் போல சிங்களாந்தபுரத்திலும் கிரிக்கெட்டே பிரபலமான விளையாட்டாகும். பள்ளி௧ள்
அலுவலகங்கள்
கோவில்கள்![]() ![]()
தேவேந்திர குல வேளாளருக்கு பாத்தியப்பட்டது
வங்கிகள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia