சிங்காய் ஏரி
சிங்காய் ஏரி ( Qinghai Lake (சீனம்: 青海湖)), ( மங்கோலியன் : Хөх нуур), (திபெத்தில்: མཚོ་ སྔོན་ པོ ་.) என்பது உலகின் இரண்டாவது மற்றும் மக்கள் சீனக் குடியரசின் மிகப்பெரிய உப்பு ஏரியாகும். . இது கிங்காய் மாகாணத்தில் அமைந்துள்ளது. சிங்காய் ஏரி உப்பு நீரேரி மற்றும் கார ஏரி என்று வகைபடுத்தப்பட்டுள்ளது. சிங்காய் ஏரி 4.317 சதுர கி.மீ. மேற்பரப்பு கொண்டுள்ளது. இதன் ஆழம் சராசரியாக 21மீட்டர். 2008ம் ஆண்டில் அளவிடப்பட்டதின்படி இதன் அதிகபட்ச ஆழம் 25.5 மீட்டர் ஆகும்.[2] இதன் தற்போதைய சீன பெயரான "சிங்காய்" மற்றும் பழைய மங்கோலியன் பெயரான கோகோனார் ஆகியவற்றின் பொருள் "நீல ஏரி" அல்லது "நீலக் கடல்" என்பது ஆகும். சிங்காய் ஏரி மாகாணத் தலைநகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் (62 மைல்) மேற்கில் அமைந்துள்ளது. இந்த உப்பு நீரேரி கடல் மட்டத்தில் இருந்து 3,205 மீ (10,515 அடி) உயரத்தில் உள்ளது.[3] இருபத்து மூன்று ஆறுகள் மற்றும் நீரோடைகள் இந்த ஏரியின் நீராதாரமாக விளங்குகின்றன. இதில் ஐந்து நிரந்தர நீரோடைகள் ஏரிக்கு 80% நீரை வழங்குகின்றன.[4] இந்த ஏரி 20 ஆம் நூற்றாண்டில் அளவில் குறைந்து அளவில் ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. இனால் இதன் உப்புத்தன்மை 2004 முதல் அதிகரித்துள்ளது, இருந்தபோதிலும் இதில் சமையலுக்கு உகந்த மீனான நிர்வாண கெண்டை (Gymnocypris przewalskii, huángyú (湟鱼)) என்றமீன் மிகுதியாகக் கணப்படுகிறது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia