சிதம்பரம் அனந்தீசுவரர் கோயில்

அனந்தீசுவரர் கோயில்
அனந்தீசுவரர் கோயில் is located in தமிழ்நாடு
அனந்தீசுவரர் கோயில்
அனந்தீசுவரர் கோயில்
அனந்தீசுவரர் கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°23′58″N 79°40′59″E / 11.3995°N 79.6831°E / 11.3995; 79.6831
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:சிதம்பரம்
கோயில் தகவல்
மூலவர்:அனந்தீசுவரர்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

சிதம்பரம் அனந்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் தில்லைவனம் என்றழைக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேர் பின்புறத்தில் இக்கோயில் உள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக அனந்தீசுவரர் உள்ளார். இறைவி சௌந்தர்யநாயகி ஆவார். கோயிலின் தீர்த்தம் பதஞ்சலி தீர்த்தமாகும்.[1]

அமைப்பு

கோயிலில் நுழைந்ததும் பதஞ்சலி தீர்த்தத்தைக் காணலாம். இடப்புறத்தில் ராஜ சண்டிகேசுவரர் உள்ளார். இக்கோயிலில் நடராசர் அருகில் பதஞ்சலி தனி சன்னதியில் உள்ளார். கோயில் மண்டபத்தூண் ஒன்றில் ஆஞ்சநேயர் தலைக்கு மேல் வாலை வைத்து வணங்கிய நிலையில் உள்ளார். திருச்சுற்றில் கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி, சனீசுவரர், நவக்கிரகம், பைரவர் ஆகியோர் உள்ளனர். அருகே சூரியனும், சந்திரனும் உள்ளனர். இறைவனின் மூலவர் கருவறை கோஷ்டத்தில் வல்லப கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். திருவாரூர் தவிர உலகிலுள்ள அனைத்து சுவாமிகளும் சிதம்பரத்தில் ஒடுங்குவதால் அங்கு அர்த்த சாம பூசை நடைபெறும். அப்பூசையை அனைத்து ரிஷிகளும், முனிவர்களும் தரிசிப்பதாகக் கொள்வர். அவர்கள் உச்சிக்காலத்தில் அனந்தீசுவரரை தரிசனம் செய்வதாகக் கூறுவர். எனவே உச்சிக்காலத்தில் இவரையும் அர்த்த சாமத்தில் சிதம்பரம் நடராசரையும் தரிசிப்பதை சிறப்பாகக் கூறுவர்.[1] இங்கு பதஞ்சலி முனிவருக்கு தனி திருமுன் உள்ளது.[2]

விழாக்கள்

ஆனித்திருமஞ்சனம், நவராத்திரி, கந்த சஷ்டி, அன்னாபிசேகம், கார்த்திகை, மார்கழி திருவாதிரை, சிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. ஆனித்திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரையில் பதஞ்சலி புறப்பாடு நடைபெறுகிறது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 அருள்மிகு அனந்தீஸ்வரர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
  2. "நித்ய அமாவாசை தலமாக விளங்கும் சிதம்பரம் ஆனந்தீஸ்வரர் கோயில்". Hindu Tamil Thisai. 2025-01-16. Retrieved 2025-04-03.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya