சித்தாந்த தரிசனம்

சித்தாந்த தரிசனம் என்னும் நூல் சிவஞான வள்ளல் என்பவர் இயற்றிய 20 நூல்களில் ஒன்று. பாயிரம், பதி, பசு, பாசம், பாசமோசனம், சிவயோகம் என்னும் ஐந்து இயல்களைக் கூறும் வெண்பாக்களையும், 379 குறள்வெண்பாக்களையும் கொண்ட நூல் இது. இந்த நூல் சைவ சமயக் கருத்துகள் பலவற்றின் தொகுப்பு போல் உள்ளது. திருக்களிற்றுப்படியார், கந்தரலங்காரம் ஆகியவற்றிலுள்ள சொற்றொடர்கள் இதில் பயின்றுவருகின்றன.

  • இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு.

இந்த நூலிலுள்ள ஒரு வெண்பா

எங்கண்ணைக் குட்டிய குட்டெங்கேனும் பட்டதோ
மங்கையர் மேலடித்த மத்தடிபோல் – எங்கேனும்
பட்டதோ எங்கள் பசுபதிமேல் பட்டஅடி
பட்டதே எவ்வுயிர்க்கும் பார்.

கருவிநூல்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya