சித்தியார் சுபபக்க உரை

சித்தியார் சுபபக்க உரை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல் .திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான தேசிகர் செய்த மூன்று உரை நூல்களில் ஒன்று.

உரைநூலுக்குத் தொடக்கமாக ஆனைமுகனைப் போற்றும் காப்புச்செய்யுள் ஒன்று உள்ளது. அவ்வாறே இறுதியிலும் 3 பாடல்கள் உள்ளன. இவை இவரது பாடல்கள். இறுதிப்பாடலைப் பிற்காலத்தவர் இவரைப் போற்றும் பாடலாகப் போற்றுகின்றனர். அந்தப் பாடல்:

நிலையுடைய அனுதினமும் நினை,எனது மனமே
தொலைவில்அருள் தரும்,அகலும் மலமுமுறு துயரும்
மலைவுடைய உனதுமட மதியுடைய அருளும்
உலைவில்மறை ஞானமுனி உரைசெய்திரு மொழியே

மறைஞான தேசிகர் தம் உரையில் வேறுபட்ட மொழிகள் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். வடமொழி, பிராகிருதம், சௌரசேனி மாகதம், பைசாசி, சூசிகா பைசாசி, அவப் பிரம்சம், தேசி – என்பன. வடமொழி ஆகமங்கள் 42, புராணங்கள் 15, பிற சைவ சாத்திரங்கள் 23, தூத்திரம் 2, தருக்கம் 1 ஆகியவை இவரது உரையில் குறிப்பிடப்படுவதால் இவர் வடமொழியிலும் வல்லவர் என்பது புலனாகிறது. தமிழிலுள்ள பல இலக்கண நூல்களையும் சைவ நூல்களையும் இவர் உரையில் சுட்டி எடுத்துக்காட்டியுள்ளார்.

சித்தியார் பரபக்க உரை என்னும் நூலை இவரது மாணாக்கர் நிரம்ப அழகிய தேசிகர் செய்துள்ளார்.

உரையில் ஒரு பகுதி

சுபபக்கமானது முன்னூலாகிய சிவஞான போதத்தின் கருத்தினையும், வழிநூலாகிய சூத்திரம் சூரணி வெண்பா இவைகளையும் சிவாகமங்களையும் முற்றும் நோக்கி அவ்வழியே பன்னிரண்டு சூத்திரமாகச் செய்தது என அறிக.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் & மூன்றாம் பாகம், பதிப்பு 2005
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya