சித்தேரி மலை

சித்தேரி மலையின் ஒரு தோற்றம்

சித்தேரி மலை என்பது தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு மலை ஆகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள இந்த மலையானது மலை கடல் மட்டத்தில் இருந்து 3600 அடி உயரம் கொண்டது.[1] இந்த மலை அரூரில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த மலையில் சித்தேரி, நொச்சிக்குட்டை, கீழநொச்சிக்குட்டை, ஜக்கம்பட்டி, அழகூர், மண்ணூர், மூலேரிக்காடு, செக்கிழுத்தாம்பூர், கல்நாடு, எருமைகடை, சூரியக்கடை, மாங்கடை, தோல்தூக்கி, ஊமத்தி, குண்டல்மடுவு, சேலூர், அம்மாபாளையம், அரசநத்தம், கலசபாடி, புளியமரத்துவளவு, ஆலமரத்துவளவு, கருக்கம்பட்டி, உள்ளிட்ட 62 மலைக்கிராமங்கள் உள்ளன. இவை சித்தேரி ஊராட்சிக்கு உட்பட்டவை. இந்த மலைக் கிராமங்களில் ஏறத்தாழ 12 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்காக ஒரு ஆரம்ப சுகாதார மையம் உள்ளது.[2] இந்த மலையில் உள்ள கோட்டை மலை என்ற பெரிய பாறை உள்ளது. இந்த கோட்டை மலையில் கரிய பெருமாள் வெங்கடராம சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள கடவுளை இந்த மலையில் வாழும் பழங்குடி மக்களின் குலதெய்வமாக வழிபடுகின்றனர். இந்த கோயிலில் பொங்கல் விழாவின்போது பழங்குடியின மக்களின் வழக்கம்படி 10 நாட்கள் விரதம் இருந்து, இறைவனுக்கு பொங்கல் இட்டு வழிபடுகின்றனர. அச்சமயத்தில் பல்லக்கில் சுவாமியை ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர். இந்த விழாவின்போது சித்தேரி மலையில் வாழும் மக்கள் மட்டுமல்லாமல், இந்த மக்களின் உறவினர் மக்கள் வசிக்கும் ஏற்காடு, பச்சைமலை, கல்வராயன் மலைகள், கருமந்துறை, வத்தல் மலை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களும் கலந்து கொள்கின்றனர்.[3]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya