சித்ராலயா கோபு
சித்ராலயா கோபு (Chitralaya Gopu) என்பவர் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் ஆவார். இவர் ஏறக்குறைய 60 படங்களுக்கு எழுதியும், 27 படங்களை இயக்கியுள்ளார்.[3] இவர் மூன்று தெய்வங்கள் , சாந்தி நிலையம் போன்ற உணர்வு பூர்வமான படங்களுக்கும், காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், உத்தரவின்றி உள்ளே வா போன்ற நகைச்சுவை படங்களுக்கும் திரைக்கதை அமைத்துள்ளார்.[4] வாழ்க்கைஸ்ரீதரும் சடகோபனும் செங்கல்பட்டு புனித ஜோசப் உயர்நிலைப் பளியில் பயிலும் காலத்திலிருந்து பல்ய நண்பர்கள்.[5] இருவரும் நாடக எழுத்தாளர்கள்; ஸ்ரீதர் மேடை நாடகங்களை எழுதி நாயகனாக நடித்தார், அதேசமயம் சடகோபன் நாடகத்தின் நகைச்சுவைப் பகுதிகளை எழுதி, நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்று நடித்தார்.[2] பின்னர், ஸ்ரீதருக்கு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தபோது, நகைச்சுவையைப் பகுதிகளை உருவாக்க சடகோபனை அழைத்துக்கொண்டார்.[6][7] கல்யாணப் பரிசு (1959) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஸ்ரீதர் சொந்த தயாரிப்பு நிறுவனமாக சித்ராலயாவைத் தொடங்கினார்.[8] சடகோபன் சித்ராலயா கோபு என்ற பெயரில் புகழ்பெற்றார். இவர் 1992 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கலைமாமணி விருதைப் பெற்றார். அமெரிக்காவில் படம்பிடிக்கப்பட்ட வாஷிங்டனில் திருமணம் என்ற தொலைக்காட்சித் தொடரை இவர் நடித்து இயக்கியுள்ளார். பணியாற்றிய திரைப்படங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia