சிந்தித்தல்![]() சிந்தித்தல் அல்லது சிந்தனை சிந்தை அல்லது மூளையில் முதன்மையாக இடம்பெறும் ஓர் அடிப்படைச் செயற்பாடு. ஆங்கிலத்தில் இதை ஓர் அறிதிறன் வழிமுறை (cognitive process) என்று கூறுவர். சிந்தித்தலின் ஊடாக சிந்தனைகள் அல்லது எண்ணங்கள் பெறப்படுகின்றன. இந்த எண்ணங்கள் மொழி, கணிதம், ஓவியம், இசை, கலைப்பொருட்கள், மனித செயற்பாடுகள் எனப் பல வடிவங்களில் வெளிப்படுகின்றன. சிந்தித்தல் இயல்நிலைஓடுவது, நடப்பது, வாசிப்பது போன்றே சிந்திப்பதும் ஒரு செயற்பாடு எனினும் சிந்திப்பதை விவரிப்பது கடினமானது. அறிவியல் நோக்கிலும் சிந்தித்தல் என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான விளக்கம் அல்லது கோட்பாடு இன்னும் இல்லை. எடுத்துக்காட்டாக ஒருவர் கடுமையாக சிந்திக்கிறார் அல்லது திறமையாக சிந்திக்கிறார் என்பதை வரையறை செய்வது சிக்கலானது. சிந்தித்தல் முதன்மையாக ஓர் அகச் செயற்பாடு என்பதால் புறவய நோக்கில் அதை விவரிப்பது இன்னும் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது. இருப்பினும் மனிதர்கள் எப்படி சிந்திக்கிறார்கள்? மூளையின் எந்த எந்தப் பகுதிகள் எந்த எந்த வகையான சிந்தனைகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகின்றன. சிந்திக்கும் பொழுது மூளையில் ஏற்படும் வேதியியல் நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள் எவை? எனப் பல வழிகளில் சிந்தித்தல் தொடர்பாக ஆய்வுகள் நடைபெறுகின்றன. கோட்பாடுகள்கயானியேலோ (Caianiello) கோட்பாடு: "சிந்தனை-செயல்முறைகளும் சிந்தனை இயந்திரங்களும் சிந்தனைக் கோட்பாட்டின் வெளிப்பாடுகளாகும்"[1] ஹோஃப்ஸ்டாடர் மற்றும் சாண்டர் (Hofstadter and Sander) கோட்பாட்டின் புறப்பரப்புகளும், சாரங்களும்: சிந்தனை என்பது நெருப்புக்கான எரிபொருளுடன் ஒப்புமைப்படுத்தப்படுகிறது.[2] ஃபெல்ட்மேன் மற்றும் லாக்ஃப் (Feldman and Lakoff) நரம்பியல் கோட்பாடு: ஒருவரின் நரம்பியல் நலன் சார்ந்து அவரது மொழி மற்றும் சிந்தனை மாறுபடுகிறது.[3] பாம் (Baum) கோட்பாடு: இது, கட்டமைப்பு, சக்தி, சிந்தனைகளின் வரம்புகள் ஆகிய சிந்தனையின் பல்வேறு கூறுகளை ஒருங்கிணைக்கும் ஒரு சிந்தனைப் பார்வை ஆகும்.[4] உணர்விழந்த நிலை சிந்தனைக் கோட்பாடு: இது உணர்வு பூர்வமாக இல்லை என்று நினைத்ததாகக் கருதுதல்.[5][6] ஸ்டீவன் பிங்கர், நோம் சோம்சுக்கி (Steven Pinker, Noam Chomsky) மொழியியல் கோட்பாடு: மொழியியல் மற்றும் புலனுணர்வு சார்ந்த சிந்தனையானது, குறியீட்டியல் மற்றும் மறுசுழற்சி செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது சிந்தனைத் திணிவு எனப்படுகிறது.[7] நடைமுறை சார்ந்த கொள்கை அல்லது உள்ளடங்கியிருத்தல் கொள்கை![]() மேற்கூறப்பட்ட கருத்துகளிலிருந்து அடிப்படையான நடைமுறைச் சார்ந்த செயல்பாடுகள், உள்ளத்தால் உணர்வறிவாகவும், அறிவுணர்வாகவும் உள்வாங்கும் கூறுகள் கொண்ட சிந்தனை அமைப்புகளின் வீச்சுப் பற்றி அறிய முடிகிறது. இருப்பினும் தீர்வு காண முடியாத, மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளை உள்ளடங்கியிருத்தல் கோட்பாட்டின்படி அணுகுவதன் மூலம் வெல்லவோ அல்லது புறந்தள்ளவோ முடியும். இதனை ஹீடெக்கர் (Heidegger), பியாஜே (Piaget), வைகோட்ஸ்கி (Vygotsky), மெரியூ-பான்ட்டி (Merleau-Ponty) மற்றும் பொருள் பயன்வழிக் கொள்கையர் ஜான் டூயீ (John Dewey) ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.[8][9] மனதைத் தனியாகப் பிரித்து, அதனைத் தனியாகப் பகுப்பாய்வு செய்யும் அடிப்படை முறையானது, தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்று உணரப்பட்டது. மாறாக மனம் உள்ளடங்கிய செயல்பாட்டுக் கருவி, எதிர்நோக்கும் சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பிரச்சினையைத் தீர்க்கும் முறை சிறந்த அணுகுமுறையாகக் கருதப்படுகிறது. மனம் சார்ந்த நடைமுறைச் சார்ந்த பகுப்பாய்வினை மட்டும் கருத்தில் கொண்டு பிரச்சினை தீர்ப்பது இயலாததாகும்.[10] ![]() சிந்தனை வெளிப்பாடுசிந்தித்தல் நிகழ்வின் போது தோன்றும் புதிய கருத்துக்களின் தொகுப்புகள், கருத்துகளின் பொருத்தமான ஒருங்கிணைவு போன்றவை சிந்தனை வெளிப்பாடுகள் எனப்படுகின்றன. மனிதன் என்ற தொகுப்பில் சிந்தித்தல் என்பது ஒரு முக்கியமான செயலாகக் கருதப்படுகிறது. இருப்பினும் 'சிந்தனை வெளிப்பாடு' என்பதைப் புரிந்து கொள்வதற்கான நிறைவான வரையறை இதுவரை எட்டப்படவில்லை. மனிதச் செயல்கள் மற்றும் இடைவினைகளின் பின்புலத்தில் சிந்தனை வெளிப்பாட்டுத்திறனின் தாக்கம் மிகுந்துள்ளது. சிந்தனை வெளிப்பாட்டுத் திறனின் இயல் நிலை, (cognitive science) தோற்ற இடைஇயல் நிலை செயலாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை அறிந்து வெளிப்படுத்தவும் முறைப்படுத்தவும் பின்வரும் கல்விப் புலங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
பெயர்த் தோற்றம் மற்றும் பயன்பாடுசிந்தனை வெளிப்பாடு என்பது பண்டைய ஆங்கிலத்தில் போத் (þoht) அல்லது ஜிபோத் (geþoht) என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தைகளின் மூல வார்த்தை பென்கன் (þencan) அதன் பொருள் ' மூளையில் உற்பத்தியாதல், மற்றும் ஏற்றுக் கொள்ளல்' 'சிந்தனை வெளிப்பாடு' என்பதன் பொருள்.[11] "சிந்தனை" என்ற வார்த்தையின் பொருள்:[12][13]
சான்பாட்டயரியார்க், தஸூ ஹூயிக் என்பார் 10 ஆம் நூற்றாண்டின் ஓவியர் ஹுக உயிரியல்நரம்பணுக்கள் அல்லது நியூரோன்கள் (Neurons) என்பவை மின்புலத்தால் தூண்டலைப் பெற்று, தகவல்களை முறைப்படுத்தி, உடலின் பல பகுதிகளுக்கும் மின்சார வேதி சமிக்ஞைகளாகக் கடத்தும் திறன் வாய்ந்த உயிரணுக்கள் ஆகும். இவையே மூளை, முதுகெலும்பிகளின் முள்ளந்தண்டு வடம், முதுகெலும்பிலிகளின் கீழ்நரம்புவடம், புற நரம்பு மண்டலம் ஆகியவற்றின் மையக் கூறாகச் செயல்படுகின்றன. பல சிறப்பு நரம்பணுக்கள் வெவ்வேறு தொழிலைச் செய்கின்றன. அவற்றில் தொடுவுணர்வு, ஒலியுணர்வு, ஒளியுணர்வு, போன்ற பல்வேறு உணர்வு உறுப்புகளால் தூண்டப்படும் சமிக்ஞைகளை முள்ளந்தண்டுவடத்திற்கும், மூளைக்கும் எடுத்துச் செல்லும் உணர்வு நரம்பணுக்கள் ஒரு வகையாகும். இயக்குநரம்புக்கலங்கள் மூளை மற்றும் முள்ளந்தண்டு வடத்திலிருந்து சமிக்ஞைகளைப் பெற்று தசைகளில் குறுக்கங்களை ஏற்படுத்துவதுடன் சுரப்பிகளையும் பாதிக்கின்றன. மூளை மற்றும் முள்ளந்தண்டு வடத்தில் உள்ள நரம்பணுக்களை, இடைநரம்பணுக்கள் இணைக்கின்றன. நரம்பணுக்கள் தூண்டல்களுக்கேற்ற துலங்கள்களை ஏற்படுத்தித் தூண்டல் தகவல்களை மைய நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகின்றன. இத்தகவல்கள் நரம்பணுக்களால் உடலின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. நரம்பணுக்கள் இழையுருப்பிரிவு நிகழ்வுக்கு உட்படுவதில்லை. மேலும் அழிந்த பின் எப்பொழுதும் மீளுருவாக்கத்திற்கு உட்படுவதில்லை. மனவியல்![]() ![]()
ஒரு தொடர்வண்டி பயணத்தில் மனிதன் சிந்திக்கிறான். சுவரில் உள்ள கருத்தோவியம் "'to think for myself' became less favorable".'என்னைப்பற்றி நானே நினைக்கும்போது எனக்கு சாதகமாக நான் நினைப்பது மிகவும் குறைவான அளவே ஆகும். அறிதல் தன்மை மனவியல் எனும் மூலத்திலிருந்து, கேள்விக்கு பதில் அல்லது ஒரு நடைமுறை பிரச்சனைக்கு அறிவார்ந்த செயல்படுத்தக்கூடிய செறிவான தீர்வு காணும் நோக்கம் கொண்டவர்களே உளவியலாளர்கள். அறிவாற்றல் உளவியல் அல்லது அறிதல் தன்மை மனவியல் என்பது உளவியலின் ஒரு பிரிவாகும். இது சிக்கல் தீர்த்தல், நினைவகம் மற்றும் மொழி போன்ற பல உள்ளக மன செயல்முறைகளை ஆராய்ந்து புதிய கூறுகளைக் கண்டறியும் பிரிவாகும். இந்த அணுகுமுறையிலிருந்து எடுக்கப்பட்ட சிந்தனையானது அறிதல் தன்மை அல்லது உள்ளத்தால் உணர்வறிவாகவும், அறிவுணர்வாகவும் உள்வாங்குதல் என்று அறியப்படுகிறது. இது, மனதில் தகவல் செயலாக்கம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குகிறது. குழந்தைகளின் புலனுணர்வு வளர்ச்சியை விவரிக்கும் நிலை / கட்டங்கள் சார்ந்த கோட்பாடுகளை மாக்ஸ் வெர்தீமர் (Max Wertheimer), உல்ஃப்காங்க் கோலர் (Wolfgang Köhler) மற்றும் குர்த் கோஃபிகா(Kurt Koffka)[15] போன்றோரின் பண்பேற்ற கெஸ்டால்ட் உளவியல் (ஜீன் ப்யாஜே) Jean Piaget வின் ஆய்வு வெளிப்பாடுகள் நன்கு பிரதிபலிக்கின்றன. தனிநபர் சார்ந்த மற்றும் தங்களின் புரிந்துணர்தல், கண்டறிதல், மற்றும் பிரச்சினைகளை தீர்த்தல் போன்ற பல நிலைகளில், அறிதல் தன்மை மனவியலாளர்கள் மனோவியல் முறைகளையும், தூண்டல் துலங்கல் முறைகளையும் மற்றும் சோதனை அணுகு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் மேற்கொள்ளும் ஆய்வுச் சிந்தனைகளின் கூறுகள்:
![]() அறிவாற்றல் உளவியல்படிமுறைத் தீர்வு மனிதனின் நடத்தை முறைகளைத் தூண்டி கணினிகளிலின் வாயிலாக மனிதனால் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தக்கூடிய புலனுணர்வு சார்ந்த மனவியலிலிருந்து அறிவாற்றல் சார்ந்த அறிவியல் வேறுபடுகிறது. மற்ற நேர்வுகளில் தீர்வுகள், உட்காட்சி மூலமோ அல்லது தொடர்புடைய சிந்தனைகளால் ஏற்படும் திடீர் விழிப்புணர்வு மூலமோ மூலமோ தீர்வுகள் ஏற்படலாம். ஜீன் பியாஜே என்பார் மேற்கொன்ட "பிறந்ததிலிருந்து முதிர்வு வரையிலான சிந்தனை வளர்ச்சி" என்ற ஆய்வு வளர்ச்சி உளவியலில் ஒரு முன்னோடி ஆய்வு ஆகும். அவரது கோட்பாடு, சிந்தனை சூழல் நடவடிக்கைகளின் அடிப்படையில் தொன்றும் புலனுணர்வு வளர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. திட்ட செயல்களின் வாயிலாகக் கிடைக்கும் கருப்பொருட்களின் அடிப்படையிலான கிரகிப்புகளின் மூலம் சுற்றுச்சூழல் புரிந்துகொள்ளப்படுவதாகவும், அதனை முன்னிறுத்தி அமைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் அதிக அளவு வீழ்ச்சியடைவதாகவும் பியாஜெட் அறிவுறுத்துகிறார். சமச்சீரற்ற தன்மை மற்றும் இடவசதி மற்றும் பொருத்தப்பாடு ஆகியவற்றுக்கு இடையிலான இடைவிளக்கத்தின் விளைவாக, தோன்றும், அனுமானம், புரிந்துணர்வு, ஒவ்வொருவரின் குணாம்சம், மற்றும் சிக்கலான தன்மை ஆகியவற்றில் இருந்து வேறுபடுகின்ற நிலைகளின் மூலம் சிந்தனை உருவாகிறது. குழந்தை பருவத்தில், முதல் இரண்டு ஆண்டுகளில் ஆரம்பகால வாழ்க்கையின் உணர்திறன் நிலைகளில் உணர்வுகள் மற்றும் செயல்களின் அடிப்படையில்தான் சிந்தனை உருவாகிறது. இதன் விளைவாக, தர்க்க ரீதியாக அமைக்கப்படும் உறுதியான செயல்பாட்டின் நிலைமையில் திட்டமிடப்படும் கட்டமைப்புகள் மீதும், பண்புகள் மீதும் ஒழுங்கமைக்கப்படும் முறையான செயல்பாடுகள் உறுதிப்படுகின்றன.[16] சமீப ஆண்டுகளில், சிந்தனை பற்றிய பியாஜேயின் கருத்துருவானது தகவல் செயலாக்க கருத்தாக்கங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எனவே, சிந்தனையானது தகவல் பிரதிநிதித்துவம் மற்றும் செயலாக்க பொறுப்பு என்னும் செயல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இந்த கருத்தின்படி, செயலாக்க வேகம், புலனுணர்வு கட்டுப்பாடு மற்றும் பணி நினைவகம் ஆகியவை சிந்தனைச் செயலின் முக்கிய கூறுகளாகும். பியாஜேயின் நவீன கோட்பாடுகளின்படி, சிந்தனைகளின் வளர்ச்சி வேகத்திலிருந்தும், அறிவாற்றல் கட்டுப்பாட்டிலிருந்தும், உழைப்பு நினைவகத்தை அதிகரிப்பதற்கு புலனுணர்வு வளர்ச்சி அவசியமாகிறது.[17] சமூகவியல்ஒரு "சிந்தனை குமிழி" எனும் சித்திரத்தில் சிந்தனையை சித்தரிக்கும் ஒரு விளக்கம் உள்ளது. ![]() "சமூக உளவியல்" என்பது மக்கள் மற்றும் குழுக்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு ஆகும். பொதுவாக உளவியலாளர்கள் அல்லது சமூகவியல் வல்லுநர்கள், மற்றும் சமூக உளவியலாளர்கள் "சமூக உளவியல்" அடிப்படையில் தனிப்பட்ட முறையிலும் மற்றும் குழுக்களாகவும் ஆய்வுகளும் பகுப்பாய்வுகளும் செய்கின்றனர்.[18] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia