சினிமாத் தூது

சினிமாத் தூது, தமிழில் முதல் முதலாக வெளிவந்த மஞ்சள் பத்திரிகையாகக் கருதப்படுகிறது.[1][2] நடிகர், நடிகைகள் பற்றிய தகவலுடன் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், சில அவதூறான கருத்துகளும் இப்பத்திரிகையில் வெளிவந்ததாக அறியப்படுகிறது. இவ்விதழின் ஆசிரியராக சி. என். லட்சுமிகாந்தன் இருந்தார். இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட காகிதப் பற்றாக்குறையால் இவ்விதழுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரசுக்குத் தெரியாமல் இவ்விதழ் சி. என். லட்சுமிகாந்தனால் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது.

இவ்விதழில் நடிகர், நடிகைகள் குறித்து ஆபாசமாக எழுதியதால், இந்த மஞ்சள் பத்திரிகை குறித்து அரசாங்கத்துக்குத் தெரிவிக்கப்பட்டது, அதன்பின்னர் இவ்விதழ் தடை செய்யப்பட்டது. இதன் பின்னர், இந்து நேசன் என்ற பத்திரிகையில் தொடர்ந்து ஆபாசமாக சி. என். லட்சுமிகாந்தன் எழுதி வந்தார். இவ்வாறு தவறான செய்திகளை வெளியிட்ட காரணத்தால் இவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.[3]

இவற்றையும் பார்க்க

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. "சினிமா கிசு கிசு வளர்ந்த கதை…". Retrieved மார்ச் 20, 2014.
  2. "Agathiyar-Groups". Retrieved மார்ச் 20, 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கே.வை சிறைக்கு அனுப்பிய லட்சுமிகாந்தன் கொலை எப்படி நடந்தது?
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya