சினேகாவின் காதலர்கள் (Snehavin Kadhalarkal) என்பது 2014ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்திரைப்படம் ஆகும். .முத்துராமாலிங்கன் எழுதி இயக்கிய இந்த படத்தில் சினேகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அத்வைதா நடித்துள்ளார். சினேகா என்ற கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் வரும் ஆண்களைச் சுற்றியுள்ளதாக கதையோட்டம் உள்ளது.[1]
இப்படத்திற்கான இசையை ஆர். பிரபாகர் மேற்கொண்டார்.[6] இப்படத்தில் ஐந்து பாடல்கள் 2014 பிப்ரவரி 19 அன்று சென்னை பிரசாத் ஸ்டுடியோஸ் லேப் தியேட்டரில் வெளியிடப்பட்டது.[7]
வெளியீடு
படம் 2014 ஆகத்து 15 அன்று வெளியிடப்பட்டது.[8]சிஃபி எழுதியது, "மொத்தத்தில், சினேகவின் கதலர்கள் படமானது நீங்கள் பார்த்த பிறகு நினைவில் இருக்கும் படம் அல்ல. இயக்குநர் குறைந்த பட்சம் மிகை நடிப்பைக் குறைத்திருந்தால், இந்த படம் பார்க்கக்கூடியதாக இருந்திருக்கும் ".[9]