சின்னத் தம்பிவிஜய் டிவியில் அக்டோபர் 2ம் தேதி 2017ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி ஜூன் 22, 2019ஆம் ஆண்டு அன்று 442 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற ஒரு காதல் காவிய தொடர் ஆகும். இந்த தொடரில் பிரஜின், பாவனி, லோகேஷ், அணிலா ஸ்ரீகுமார், சாதனா மற்றும் பிரியா ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்தத் தொடரை அருள் ராசன் இயக்கியுள்ளார். இளையவன் இசை அமைத்துள்ளார்.[1][2][3][4] இந்த தொடர் வங்காளி மொழி தொடரான க்ஹோகபாபு எனும் தொடரின் தமிழ் பாதிப்பாகும்.
கதைசுருக்கம்
கிராமத்து வெகுளி பையனான சின்னத்தம்பி வீரமும், பாசமும் நிறைந்த, அம்மா பிள்ளை. மற்றொருபக்கம், பணக்கார திமிர் பிடித்த நகரத்து பெண் நந்தினி. இந்த இரு துருவங்கள் கல்யாண வாழ்க்கையில் இணைந்தால் என்ன ஆகும் என்பது தான் கதை.
இந்த தொடரின் சின்னத்தம்பியாக காதலிக்க நேரமில்லை தொடரின் புகழ் பிரஜின் நடிக்கிறார். மேலும், நந்தினியாக ரெட்டை வால் குருவி புகழ் பாவனி ரெட்டி அவர்கள் நடிக்கிறார். இந்த தொடரின் இயக்குநர் அருள்ராசன்.