சின்னமிக் அமிலம்
சின்னமிக் அமிலம் (Cinnamic acid) என்பது C6H5CHCHCO2H என்ற மூலக்கூற்று வய்ப்பாடு கொண்ட கரிமவேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறங்கொண்ட படிகச் சேர்மமான இது நீரில் சிறிதளவு கரைகிறது. ஆனால் கரிமக் கரைப்பான்களில் நன்கு கரைகிறது [3]. நிறைவுறாத கார்பாக்சிலிக் அமிலமாக வகைப்படுத்தப்பட்டுள்ள இவ்வமிலம் இயற்கையாக பல தாவரங்களில் கிடைக்கிறது. ஒருபக்க மாற்றியன் மற்றும் மாறுபக்க மாற்றியன் என்ற இரு வடிவங்களிலும் காணப்பட்டாலும் மாறுபக்க மாற்றிய வடிவமே பொதுவாகக் காணப்படுகிறது [4]. தோற்றமும் உற்பத்தியும்இயற்கையில் சின்னமிக் அமிலம்சின்னமன் எண்னெயிலிருந்து அல்லது சிடோராக்சு எனப்படும் மரப்பாலில் இருந்து சின்னமிக் அமிலம் பெறப்படுகிறது [5]. விட்டெலேரியா எனப்படும் ஆப்பிரிக்க வகை மரங்களிலிருந்து கிடைக்கும் சியா எண்ணெயில் சின்னமிக் அமிலம் காணப்படுகிறது. தேனின் நறுமணத்தைக் கொண்டுள்ள சின்னமிக் அமிலமும், எளிதில் ஆவியாகக்கூடிய இதன் சின்னமிக் எசுத்தரான எத்தில் சின்னமேட்டும் சின்னமன் எண்ணெயின் நறுமண உட்கூற்றுப் பொருள்களாகக் காணப்படுகின்றன ref>Cinnamic acid, flavornet.org</ref>. குறிப்பாக இதில் சின்னமால்டிகைடு பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. சிக்கிமேட்டு மற்றும் பீனைல்புரோப்பனாய்டு உயிர்த் தொகுப்பு வழிமுறைகளின் ஒரு பகுதியாகவும் சின்னமிக் அமிலம் காணப்படுகிறது. பீனைலலானின் மீது பீனைலலானின் அமோனியா-லையேசு நொதி செயற்படுவதனால் உயிர்த்தொகுப்பு வினை நிகழ்கிறது. தயாரிப்புபெர்க்கின் வினை எனப்படும் அசலான தொகுப்பு முறையில் சின்னமிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. அசிட்டிக் நீரிலியையும் பென்சால்டிகைடையும் சேர்த்து காரவினையூக்கியின் முன்னிலையில் வினைபுரியச் செய்தால் சின்னமிக் அமிலம் உருவாகிறது. பென்சால்டிகைடும் எசுத்தர்களும் வினைபுரிந்து சின்னமேட்டு எசுத்தர்கள் உருவாகும் தொகுப்பு முறையை இரெய்னர் லுத்விக் கிளெய்சன் (1851–1930) விவரித்தார்[6]. இவ்வினையே ஆல்டால் குறுக்கம் எனப்படுகிறது. நீரிலியின் நீராற்பகுப்பும் இவ்வினையுடன் நிகழ்கிறது. சின்னமால்டிகைடு மற்றும் பென்சால் குளோரைடு வினையிலும் சின்னமிக் அமிலத்தைப் பெற முடியும்[4]. கினோவெனாகெல்-ஆன்சு குறுக்க வினை வழியாகவும் சின்னமிக் அமிலம் தயாரிக்க முடியும். வலிமை குறைந்த ஒரு காரத்தின் முன்னிலையில் தொடர்புடைய பென்சால்டிகைடும் மலோனிக் அமிலமும் இவ்வினையில் பயன்படுத்தப்படுகின்றன[7]. வினையின் முடிவில் நீராற்பகுப்பு வினையும் நிகழ்கிறது. பயன்கள்செயற்கை இண்டிகோ மற்றும் சில மருந்துவகைப் பொருட்களில் சின்னமிக் அமிலம் நறுமணப் பொருளாகப் பயன்படுகிறது. நறுமணத் தொழிற்துறையில் [5] பயன்படும் மெத்தில், எத்தில், பென்சைல் எசுத்தர்கள் தயாரிப்பில் பயன்படுவது சின்னமிக் அமிலத்தின் பெரும்பயனாகும். பீனைலலானினை [4] நொதிவினையூக்க அமீனேற்றம் செய்யும் வழியில் அசுபார்ட்டம் எனப்படும் இனிப்பூட்டி தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக சின்னமிக் அமிலம் இருக்கிறது. முனைவற்ற கரைப்பான்களில் சின்னமிக் அமிலம் இருபடிச் சேர்மமாக மாற்றமடைகிறது. இதன் விளைவாக வினை நேரியல் கிப்சு ஆற்றல் தொடர்புச் சமநிலையை அடைகிறது [8]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia