சின்முத்திரைஅறிவின் உயர்நிலையை அல்லது ஞானத்தைக் கைவிரல்களால் காட்டும் அடையாளம் சின்முத்திரை ஆகும். சின்முத்திரை மகரிசிகள், ஞானிகள் தங்களுக்கு ஏற்படும் தெளிவுநிலையை விளக்க உபயோகப்படுத்துவர். இந்துக் கடவுளான தட்சிணாமூர்த்தி இந்த முத்திரையுடனே காட்சியளிப்பார். சற்குருவாக அமைந்து ஞானத்துக்கு வழிகாட்டியாக இருப்பவர் என்பதை இது விளக்குகின்றது. சின் முத்திரை ஞான முத்திரை எனவும் அழைக்கப்படும். சின்முத்திரை காட்டப்படும் முறை![]() வலதுகையில் சுட்டு விரலால் அதன் பெரு விரலின் நுனியைச் சேர்த்து மற்றைய மூன்று விரல்களையும் வேறாக தனியே நீட்டி உயர்த்திப் பிடித்தல் சின்முத்திரை ஆகும். இங்கு பெருவிரல் இறைவனைக் குறிக்கிறது. சுட்டுவிரல் ஆன்மாவைக் குறிக்கிறது. நடுவிரல் ஆணவ மலத்தையும், மோதிர விரல் கன்ம மலத்தையும் , சின்னவிரல் மாயாமலத்தையும் சுட்டுகின்றன. அதாவது ஆன்மா இறைவனைச் சேரும் போது ஆணவம் முதலான மும் மலங்களும் ஆன்மாவை விட்டு நீக்கம் பெறுகின்றன என்பதே இதன் கருத்து. ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia