சின்வால்டைட்டு
சின்வால்டைட்டு (Zinnwaldite) என்பது KLiFeAl(AlSi3)O10(OH,F)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமம் ஆகும். பொட்டாசியம் இலித்தியம் இரும்பு அலுமினிய சிலிகேட் ஐதராக்சைடு புளோரைடு கனிமமாக வகைப்படுத்தப்படும் இது மைக்கா குழுவில் உள்ள ஒரு சிலிக்கேட்டு கனிமமாகும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் சின்வால்டைட்டு கனிமத்தை Znw[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. சிடரோபைலைட்டுக்கும் (KFe2Al(Al2Si2)O10(F,OH)2) பாலிலித்தியோணைட்டுக்கும் (KLi2AlSi4O10(F,OH)2) இடைப்பட்ட நிலையில் சின்வால்டைட்டு கனிமம் உள்ளதாகவும் பன்னாட்டு கனிமவியல் சங்கம் குறிப்பிடுகிறது. ஒரு செல்லுபடியாகும் கனிம இனமாகவும் இது கருதப்படவில்லை.[3] கண்டுபிடிப்புசின்வால்டைட்டு முதன்முதலில் 1845 ஆம் ஆண்டு செருமன்-செக் குடியரசு எல்லையில் உள்ள சின்வால்டில் (இன்று சினோவெக்) கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது..[3] தோற்றம்இது பெரும்பாலும் வெள்ளீயத் தாது படிவுகளுடன் தொடர்புடைய கிரீசன்சு, பெக்மாடைட் மற்றும் குவார்ட்சு படிகங்களின் விளிம்புகளில் காணப்படுகிறது. இது பொதுவாக புட்பராகம், கேசிட்டரைட்டு, உல்பிரமைட்டு, இலெபிடோலைட்டு, சுபோடுமீன், பெரில், தூர்மலைன் மற்றும் புளோரைட்டு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து காணப்படுகிறது.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia