சிம்பல்பார தேசிய பூங்காசிம்பல்பரா தேசிய பூங்கா (Simbalbara National Park) இந்தியாவில் உள்ள தேசிய பூங்காவாகும். இது இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மெளர் மாவட்டத்தின் பாண்டா பள்ளத்தாக்கில், அரியானாவின் எல்லையில் அமைந்துள்ளது . அடர்த்தியான சால் காடுகளைக் கொண்டிருக்கின்றது. இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியானது 1958ஆம் ஆண்டில் சிம்பல்பாரா வனவிலங்கு சரணாலயமாக 19.03 சதுர கிலோ மீட்டர் பரப்பில் உருவாக்கப்பட்டது. 2010ல் 8.88 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு சேர்க்கப்பட்டு தேசிய பூங்காவாக மாற்றப்பட்டது.[1] தற்பொழுது சுமார் 27.88 சதுர கிலோமீட்டர்கள் (10.76 sq mi) பரப்பளவில் இந்த பூங்கா அமைந்துள்ளது.[2] இந்த பூங்காவின் பள்ளத்தாக்கில் வற்றாத நீரோடை ஒன்று உள்ளது. இமாச்சல பிரதேசத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை இந்த பூங்காவை அதன் இயற் வடிவத்தில் பாதுகாத்து வருகின்றது.[3] சிம்பல்பாரா வன ஓய்வு இல்லம் புருவாலாவிலிருந்து சாலைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த இல்லத்திலிருந்து பள்ளத்தாக்கின் அழகிய காட்சிகளை ரசிக்கலாம். கோரல், கடமான் மற்றும் புள்ளிமான் ஆகியவை இங்கு காணப்படும் பொதுவான விலங்குகளாகும். அருகிலுள்ள காடுகளில் வனத்தினைச் சுற்றிப் பார்க்க நடைபாதைகள் உள்ளன. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பூங்காவைச் சுற்றிப்பார்க்கச் சிறந்த நேரம். [4] அணுகல்
குறிப்புகளும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia