சிரக்கல் காளிதாசன்
சிரக்கல் காளிதாசன் (Chirakkal Kalidasan)(பிறப்பு சி. 1980) என்பது ஒரு பிரபலமான யானை ஆகும். இது கேரளாவில் உள்ள உயரமான யானையாக இந்தியாவின் மிக உயரமான யானையான தெச்சிக்கோட்டுகாவ் ராமச்சந்திரனுக்கு அடுத்த நிலையில் உள்ளது.[1][2] சிரக்கல் காளிதாசன் தற்போது 314 செ.மீ. உயரமுடையது. இது இம்மாநிலத்தின் வளர்ப்பு யானைகளில் உயரமானது ஆகும்.[3] சில தலப்பொக்கம் (ஹெட்ஸ்-அப்) போட்டிகளில் வென்றதற்காகவும் அறியப்படுகிறது.[4] ஆரம்ப கால வாழ்க்கைகாளிதாசன் கர்நாடக காடுகளில் வனப்பகுதியில் பிறந்தது. சிரக்கல் காளிதாசன் ஆசிய வகை யானையாகும் (எலிபாசு மாக்சிமசு). மணிஸ்ஸி ஹரியால் கேரளாவுக்கு அழைத்து வரப்பட்ட காளிதாசன் பின்னர் 2000 ளில் சிரக்கல் மது என்பவரால் உரிமையாக்கப்பட்டது.[5] அங்கீகாரங்கள்காளிதாசன் மலையாளத் திரைப்பட்த்துறையில் ஒரு நட்சத்திர யானையாகும். திரைப்படங்கள்2017ல் வெளியான காவிய திரைப்படமான பாகுபலி 2ல் நடித்த பெருமையுடையது.[6] பட்டாபிசேகம், புனலையன் அகர்பத்தி மற்றும் தில் சே படங்களில் நடித்த பெருமையுடையது.[7] காணொலி தொகுப்பு2018ஆம் ஆண்டில், விஜய் யேசுதாஸ் பாடிய "கஜம்" என்ற இசை காணொலியில் நடித்துள்ளது.[8] பிற2020ஆம் ஆண்டில், இந்தியன் சூப்பர் லீக் அணியான கேரளா பிளாஸ்டர்ஸின் விளம்பர காணொளியில் ஒரு பகுதியில் பங்கேற்று உள்ளது.[9][10] 2010களின் முற்பகுதியில், யானை பிரியர்களால் இவருக்கு இளையவர் தெச்சிகோட் என்ற பெயர் வழங்கப்பட்டது.[11] நடிகர்கள் மற்றும் மாதிரிகளுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வுகளில் காளிதாசன் பங்கெடுத்துள்ளார்.[12] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia