சிரேயா கோசல் அல்லது சிரேயா கோஷல் (Bengali: শ্রেয়া ঘোষাল; born 12 March 1984) ஓர் இந்தியப் பாடகி. பல மொழித் திரைப்படங்களில் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும், பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். இவர் தேவ்தாஸ் இந்தி படம் மூலம் 2002ஆம் ஆண்டு திரைப்பட உலகுக்கு அறிமுகமானார்.
கோஷல் தனது நான்காவது வயதில் இசையைக் கற்கத் தொடங்கினார்.[1] ஆறாவது வயதில் பாரம்பரிய இசையில் தனது பயிற்சியைத் தொடங்கிய இவர், சா ரே கா மா என்ற தொலைக்காட்சி மெய்ம்மைக் காட்சியில் வெற்றி பெற்ற பிறகு, 2002-ஆம் ஆண்டு காதல் படமான தேவதாசு (2002) மூலம் அறிமுகமானார். இவரது முதல் பாடல்களான "பைரி பியா" மற்றும் "டோலா ரே டோலா" மிகப் பிரபலமானது. சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றது. "தீரே ஜல்னா", "யே இஷ்க் ஹாயே", "பெராரி மோன்",[2] "ஜீவ் ரங்லா",[3] மற்றும் "மாயவ தூயவா" ஆகியப் பாடல்களுக்காக நான்கு தேசிய விருதுகளைப் பெற்றார்.[4][5]
இளமை
சிரேயா கோசல் 12 மார்ச் 1984[6] அன்று மேற்கு வங்காளத்தில் பெர்காம்பூர், முர்சிதாபாத்தில் உள்ள ஒரு பெங்காலி பிராமண குடும்பத்தில் பிறந்தார்.[7] இவர் இராசத்தானின் கோட்டாவிற்கு அருகிலுள்ள ராவத்பட்டா என்ற சிறிய நகரத்தில் வளர்ந்தார்.[8] இவரது தந்தை, பிஷ்வஜித் கோஷல் ஒரு மின் பொறியாளர். இவர் இந்திய அணுசக்தி கழகத்தில் பணிபுரிகிறார். மேலும் இவரது தாயார் சர்மிசுதா கோசல் ஒரு இலக்கிய பட்டதாரி.[9] நான்கு வயதில், இவர் இசையைக் கற்கத் தொடங்கினார்.[10][11] இவருடைய இளைய சகோதரர் சௌம்யதீப் கோசல். இவரும் இசைக்கலைஞர் ஆவார்.[12]
கோசல் தனது பள்ளிப்படிப்பை எட்டாம் வகுப்பு வரை ராவத்பாட்டாவில் உள்ள அணுசக்தி மத்திய பள்ளி எண்.4-இல் முடித்தார்.[8] 1995-ஆம் ஆண்டில், இளையோர் அளவிலான மெல்லிசை பாடல் குழு சங்கம் கலா குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட புது தில்லியின் அகில இந்திய மெல்லிசை போட்டியில் வெற்றி பெற்றார். 1997-இல், இவரது தந்தை பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்கு மாற்றப்பட்டபோது, இவர் தனது குடும்பத்துடன் மும்பைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மும்பையில் அனுசக்தி நகரில் உள்ள அணுசக்தி மையப் பள்ளியில் படித்தார்.[13][14][15] அறிவியல் படிப்பதற்காக அணுசக்தி இளையோர் கல்லூரியில் சேர்ந்தார். இவர் இக்கல்லூரியிலிருந்து வெளியேறி, மும்பையில் உள்ள எசு. ஐ. இ. எசு. கலை, அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியில் சேர்ந்தார். இங்கு இவர் ஆங்கிலத்தினை முதனமைப் பாடமாக கற்றார்.[9][8][16]
திரைப்படத்தில் பெண் குரலில் பாடும் பாடல் இடம்பெறவில்லை. சில வரிகள் மாற்றத்துடன் ஆண் குரலில் பாடப்பட்ட பாடல் மட்டும் திரைப்படத்தில் அமைந்துள்ளது.[32] பெண் குரலில் இடம்பெறும் பாடலின் வரிகளுக்கும் ஆண் குரலில் இடம்பெறும் பாடலின் வரிகளுக்கும் பெரிதான வித்தியாசம் தெரியாவண்ணமிருக்கும்; ஆனால் கூர்ந்து கவனித்தால் அதிலிருக்கும் முரணும் அழகும் தெரியவரும்.
முக்கியத்துவம்
அமேசான் தளத்தில் வெளியிடப்பட்ட பிரபலமான பாடல்கள்[33] வரிசையில் இப்பாடலும்[34] இடம்பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தின் பாடல்களுக்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது. மற்ற பாடல்களை விட இப்பாடலே அதிகமாக பிரபலமானது சுமாராக 15969 முறை கேட்கப்பட்டுள்ளது.[35] ஐஎம்டிபி தளத்தில் இத்திரைப்படப் பாடல்கள் வரிசைப்படுத்தியதில் இப்பாடல் முதலிடத்தில் உள்ளது.[36] யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் தளத்தில் இப்பாடலுக்கு முதலிடம் கொடுத்துள்ளனர்.[37] இப்பாடல் சிறந்த பாடகியாக ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[38] 2004-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப் பாடலுக்கு, 2006-ம் ஆண்டு வரை வெளிவந்த வலைத்தளங்களிலும் இப்பாடல் பற்றி நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.[39]
பாடல் வரிகள்
ஆண் குரல்
பெண் குரல்
நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் எதற்கு பெண்ணே
எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் உனக்குக் கண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படிச் சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா?
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமாய்...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படிச் சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா?
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமாய்...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே?
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே
முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு
பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கறையும் வார்த்தை கறையுமா?
பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா?
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழிகள் என்னை மறக்குமா...