சிறப்புப் படைகள் (ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை)
ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் சிறப்புப் படைகள் (United States Army Special Forces அல்லது Green Berets - பச்சை வட்ட வடிவத் தொப்பி) அல்லது கிறீன் பரட் எனப்படுவது ஐந்து முதன்மையான பணிகளைக் கொண்ட சிறப்பு நடவடிக்கைகள் படை ஆகும். அப்பணிகளாவன: மரபற்ற போர் (சிறப்பு படைகளின் முதலாவதும் முக்கியமானதுமான பணி), வெளிநாட்டு உள்ளகப் பாதுகாப்பு, சிறப்புப் புலனாய்வு, நேரடி நடவடிக்கை மற்றும் பயங்கரவாதத் தடுப்பு என்பனவாகும். முதல் இரண்டும் மொழி, கலாச்சாரம், பயிற்சி கொடுக்கும் திறமை ஆகியவற்றை தொடர்புபட்ட நாட்டு படையுடன் முதன்மைப்படுத்திக் காணப்படுகின்றது. ஏனைய பணிகளான தேடி மீட்டல், போதைப்பொருள் எதிர்ப்பு, பரவல் எதிர்ப்பு, போதைப்பொருள் தடுப்பு, மனிதநேயப் பணிகள், மனிதநேய ரீதியான வெடிபொருள் செயலிழப்பு, தகவல் நடவடிக்கைகள், அமைதி காத்தல், உளவியல் ரீதியான நடவடிக்கைகள், பாதுகாப்பு உதவி மற்றும் குற்றவாளியைக் கண்டுபிடித்தல் ஆகியன இரண்டாம்பட்ச பணிகளாகக் காணப்படுகின்றன.[3] இவற்றின் நடவடிக்கை நுட்பங்கள் பல மர்மமானவை, ஆனால் சில புனைவற்ற செயல்களாகவும்[4] போதனை கையேடுகளாகவும் உள்ளன.[5][6][7] இவற்றையும் பார்க்கஉசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia