சிறப்புப் பொருளாதார மண்டலம்வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பொதுச் சட்டங்களிலிருந்து விலக்களித்து, சிறப்புச் சலுகைகளுடன் ஓர் அரசால் ஏதுவாக்கப்படும் கட்டமைப்பே சிறப்புப் பொருளாதார மண்டலம் (Special Economiz Zone (SEZ)) ஆகும். இதைத் தமிழில் சிறப்புப் பொருண்மிய வலயம் என்றும் குறிப்பிடுவர்.[1][2][3] சிறப்புப் பாதுகாப்புஇது வரையறுக்கப்பட்ட புவியியல் பிரதேசத்தில் மதில்கள் சிறப்புப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் உருவாக்கப்படுகின்றது. இதில் முதலீடு செய்யும் வர்த்தகங்களால் ஏற்படும் பொருளாதார விருத்தியும் வேலைவாய்ப்புக்களும் இத்தகைய அரசின் கொள்கையை நியாயப்படுத்துகின்றது. எனினும் இது சமனற்ற பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச்செல்வதாக அனைத்துலக நாணய நிதியம் கருத்துத் தெரிவித்துள்ளது.[1] இந்தியா போன்ற நாடுகளில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய நாட்டின் பொது நிலைமையிலிருந்து விலகி தமது வர்த்தகத்தை மேற்கொள்ள உதவுகின்றன. விமர்சனங்கள்
நவீன காலனிகளா?"இம் மண்டலத்திற்கான பாதுகாப்பு, தொழிலாளர் நலச் சட்டங்கள், பஞ்சாயத்து சட்டங்கள் உட்பட 27 வகைகளில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திடவும், ஒப்பந்தக் கூலி என்ற பெயரில் வருடத்திற்கு ஒரு முறை நீட்டித்துக் கொள்ளவும், 8 மணி நேர வேலை பாதுகாப்பு, இ.எஸ்.ஐ., மருத்துவம், பணிப் பாதுகாப்பு என எந்த சட்டரீதியான பாதுகாப்பும் இம்மண்டலத்திற்குள் செல்லுபடியாகாது. மொத்தத்தில் சுதந்திர இந்தியாவிற்குள் ஏகபோக மற்றும் பெரு முதலாளிகளின் நவீன காலனிகளாக இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமையவுள்ளன." [5] வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia