சிறீநாதர்
சிறீநாதர் (Srinatha) ( சுமார் 1355-1360 - 1441) 15 ஆம் நூற்றாண்டின் நன்கு அறியப்பட்ட தெலுங்கு கவிஞர் ஆவார். இவர் பிரபந்த பாணி கலவையை பிரபலப்படுத்தினார். சுயசரிதைசிறீநாதர், 1355/1360 இல் கிருஷ்ணா மாவட்டத்தில் கூடூர் மண்டலத்தில் உள்ள காலபடம் என்ற கிராமத்தில் தெலுங்கு நியோகி பிராமணக் குடும்பத்தில் பீமாம்பா மற்றும் மாரய்யா ஆகியோருக்கு பிறந்தார் [5] சிறீநாதர் தெலுங்கில் கவி சர்வபௌமா (கவிகளின் அரசர்) என்று மதிக்கப்பட்டார். மேலும் பல மன்னர்களால் ஆதரிக்கப்பட்டார். கொண்டவீடு கோட்டை வேமா ரெட்டியின் அரசவையில் அமைச்சராகப் பணியாற்றினார். தனது இலக்கியத் திறமைக்கு ஈடாக தேவரகொண்டாவின் லிங்கமநேடு ஆட்சியாளரிடமிருந்து நந்திகண்ட பொத்தராஜு கட்டாரி என்ற மதிப்புமிக்க கத்தியைப் பெற முடிந்தது. இவர் ஏராளமான புத்தகங்களை தயாரித்து அரசர்களுக்கு அர்ப்பணித்து ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவித்தார். இருப்பினும், தனது வாழ்நாளின் இறுதியில் வறுமையால் அவதிப்பட்டதாகத் தெரிகிறது. 1441 இல் சிறீநாதர் இறந்தார். [6] திரைப்படங்களில் காட்டப்படுவது போல் இவர் மற்றொரு பிரபல தெலுங்குக் கவிஞர் போத்தன்னாவின் மைத்துனர் அல்ல. பணிகள்பண்டிதாராத்யசரிதம், சிவராத்திரி மகாத்யம், ஹரவிலாசமு, பீமகாண்டம், காசிகாண்டம், சிருங்கார நைசதம், பழநதி வீரசரித்திரம், தனஞ்சய விஜயம், மருதராட்சரித்திரம், சிருங்காராதிபிகா மற்றும் கிருதாபிராமம், சாலிவாஹன கதா சப்தசதியை பிராகிருதத்திலிருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்த்தார். பிரபலமான கலாச்சாரத்தில்பப்பு என்று அறியப்பட்ட சத்திராசு லட்சுமி நாராயணா இயக்கிய சிறீநாத கவி [7] என்ற இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் 1993 ஆம் ஆண்டில் நடிகர் என். டி. ராமராவ் மற்றும் ஜெயசுதா ஆகியோரின் நடிப்பில் வெளியானது. 1942 இல் வாகினி ஸ்டுடியோஸ் தயாரித்த பக்த போத்தன்னா என்ற தெலுங்கு திரைப்படத்தில் சிறீநாதர் ஒரு முக்கிய கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளார். திரைப்படத்தில் வி. நாகையா போத்தன்னாவாகவும், கௌரிநாத சாஸ்திரி சிறீநாதராக நடித்திருந்தனர். மேற்கோள்கள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia