சிறுவர்களுடனான பாலியல் முறைகேடு
குழந்தைகளுடனான பாலுறவு (Child sexual abuse) மாந்தர் ஒருவர் குழந்தைகளுடன் கொள்ளும் பாலுறவு ஆகும். பாலுறவுக்கான அறிவு எட்டப்படாத குழந்தைகளுடன் பாலுறவு கொள்வது, அக்குழந்தைகளின் உடல்நிலை மட்டுமல்லாது மனநிலையையும் பாதிக்கும். இது பாலியல் வன்மம் என்றே சமூகத்தினால் வரையறுக்கப்படுகிறது. இத்தகு மனநிலை ஒரு மனநிலை நோயாக (Pedophilia) வரையறுக்கப்பட்டுள்ளது.குழந்தைகளுடனான பாலியல் வன்முறை எனப்படுவது சிறார்களை பாலியல் நடத்தைகளில் பாவிப்பதைக் குறிக்கின்றது. பாலியல் முறையில் தொடுதல், தொடவைத்தல், பாலியல் செயற்பாடுகளில் பயன்படுத்தல், வன்கலவி, பாலியல் உறுப்புகளை அல்லது ஆபாசப் படங்களை காட்டுதல் என பல தரப்பட்ட நடத்தைகள் சிறார் பாலியல் குற்றங்களில் அடங்கும். வீட்டு வேலைக்குச் செல்லும் குழந்தைகளும், குழந்தைத் தொழிலாளர்களும் இந்த பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றார்கள். குழந்தைகளை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்துவதும் இந்த பாலியல் நடவடிக்கைக்குள் அடங்கும். இம்மாதிரியான நடவடிக்கைகள் உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளில் கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களாகும். தடுப்புக்கல்வி
இதனையும் காண்கமேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia