சிவகுமாரின் சபதம்
சிவகுமாரின் சபதம் ( Sivakumarin Sabadham ) என்பது 2021ஆம் ஆண்டு தமிழில் வெளியான நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். ஹிப்ஹாப் தமிழா என்கிற ஆதி எழுதி இயக்கியிருந்த இந்தப் படத்தில் அவர் நாயகனாக நடித்திருந்தார். இது இயக்குநராக அவரது இரண்டாவது படமாகும். மேலும், இண்டி ரெபல்ஸ் பதாகையில் சத்ய ஜோதி பிலிம்ஸுடன் இணைந்து தயாரித்தார். நடிகை மாதுரி ஜெயினுக்கு இணையாக ஆதி நடித்துள்ளார்.[1] படம் 30 செப்டம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டு கலவையான விமர்சனங்களை எதிர் கொண்டது.[2] நடிகர்கள்
தயாரிப்புமுதன்மை புகைப்படம் எடுக்கும் பணி அக்டோபர் 2020 இல் தொடங்கியது. மேலும் அந்த ஆண்டு திசம்பருக்குள் படம் முடிக்கப்பட்டது.[3] வரவேற்புபிலிம் கம்பேனியனின் விஷால் மேனன் "படத்தின் கதைக்கரு நாம் இதற்கு முன்பு பலமுறை பார்த்ததுதான். ஆனால் பொதுவாக ஒருவர் உட்கார்ந்து பார்க்கூடிய எளிமை உள்ளது" எழுதினார்.[4] ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "எங்கெங்கோ சுற்றி இரண்டாம் பாதியில் தொய்வடைந்து மீண்டும் கடைசி இருபது நிமிடங்கள் இழுத்துப் பிடித்துக் கரை சேர்கிறார் இயக்குநர் ஆதி. பல தசாப்தங்களாக கோலிவுட்டில் பார்த்து வருவதுதான் என்பதால் மற்றுமொரு சபதமாகக் கடந்துபோகிறது இந்த ‘சிவகுமாரின் சபதம்." என்று எழுதி 41100 மதிப்பெண்களை வழங்கினர்.[5] ஒலிப்பதிவுபடத்தின் ஒலிப்பதிவை ஹிப்ஹாப் தமிழா மேற்கொண்டுள்ளார். பாடல் வரிகளை ஹிப்ஹாப் தமிழா, ரோகேஷ் மற்றும் கோ சேஷா எழுதியுள்ளனர். சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia