சிவக்குமார சுவாமி (Shivakumara Swami, 1 ஏப்ரல் 1907 – 21 சனவரி 2019)[1] இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஆன்மீக தலைவரும் கல்வியாளரும் ஆவார். இவர் கர்நாடகத்தைச் சேர்ந்த சித்த கங்கா மடத்தின் தலைவரும் வீர சைவப் பிரிவில் ஒரு முக்கிய தலைவருமாவார். அவருடைய இறப்புக்கு முன்பு அதாவது 111 ஆண்டுகள் 295 நாட்கள் வாழ்ந்தவர் இந்தியாவில் நீண்ட நாட்கள் வாழ்ந்து கொண்டு வாழ்ந்தவர்கள் பட்டியலில் இருந்தார். 2015 ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருதை அளித்தது.[2]
சமூகப் பணி
துவக்கப் பள்ளி முதல் பொறியியல் முதலான கல்லூரி படிப்பு வரை இவர் மொத்தம் 132 கல்வி நிறுவனங்களை தோற்றுவித்துள்ளார். மேலும் இவரது குருகுலத்தில் பத்தாயிரம் பள்ளி செல்லும் வயதில் உள்ள அனைத்து மத சாதி மாணவர்களுக்கும் இலவச உணவு உடை இருப்பிடத்துடன் கல்வி வழங்கப்படுகிறது.[3]
பெருமைகளும் விருதுகளும்
இவரது மனிதநேய பணியைப் பாராட்டி கர்நாடக பல்கலைக்கழகம் 1965ஆம் ஆண்டு இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. மேலும் அவரது நூறாவது பிறந்த ஆண்டான 2007ஆம் ஆண்டு கர்நாடக அரசு மாநிலத்தின் உயர்ந்த விருதான கர்நாடக ரத்னா விருதினை அளித்தது.[4] 2015 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம பூஷன் விருது அளித்தது.