சிவதத்துவ விவேகம்

சிவதத்துவ விவேகம், ஐந்தாம் பதிப்பு, நாவலர் வெளியீடு

சிவதத்துவ விவேகம் எனும் தமிழ் நூல், அப்பைய தீட்சிதர் என்பவர் எழுதிய இதே பெயரைக் கொண்ட சமசுக்கிருத நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. செய்யுள் வடிவில் இம்மொழிபெயர்ப்பைச் செய்தவர் சிவஞான யோகிகள். இவரைச் சிவஞான சுவாமிகள் என்றும் குறிப்பிடுவதுண்டு. இது 63 செய்யுள்களால் ஆனது. பாயிரச் செய்யுள்கள் ஏழையும் சேர்த்து மொத்தம் 70 பாடல்கள் இந்நூலில் உள்ளன. [1]

சைவ சமயம் சார்ந்த இந்த நூல், உபநிடதங்களில் காணப்படும் சிவனது கடவுட் தன்மை குறித்த விடயங்களை ஒருங்கே எடுத்துரைக்கிறது. இந்து சமயத்தின் மும்மூர்த்திகளான சிவன், திருமால், பிரமன் ஆகியோருள் சிவனை இது மேன்மைப்படுத்திக் கூறுகின்றது.

இவற்றையும் காண்க

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. http://www.shaivam.org/tamil/sta-sivagnana-shiva-tattva-vivekam-tamil.htm பரணிடப்பட்டது 2012-10-15 at the வந்தவழி இயந்திரம் சிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya