சிவ கவசம்

சிவ கவசம் என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வரதுங்கராமர் பாடிய பிரமோத்தர காண்டம் என்னும் நூலின் பகுதியேயாயினும் [1] இதன் சிறப்பு கருதி இதனைத் தனி நூலாக அச்சிட்டுள்ளனர். இது கந்தர் சஷ்டி கவசம் போன்றது. தன் உடம்மிலுள்ள ஒவ்வொரு உறுப்பின் பெயரையும் சொல்லி அதனைச் சிவன் காக்கவேண்டும் என்று இந்த நூல் பாடுகிறது. சைவர்கள் இதனை மனப்பாடம் செய்துகொண்டு பாடி வழிபாடு செய்வது வழக்கம்.

இந்த நூலில் 12 பாடல்கள் உள்ளன. பத்திராயு என்னும் அரசகுமரனுக்கு விடபமுனி உரைத்தது என்று, சூதக முனிவர் என்பவர் நைமிசாரணிய முனிவருக்குத் தெரிவிக்கிறார். [2]

இந்த நூலின் முதலாவது பாடல்

அகில நாயகனாய் ஞான ஆனந்த ரூபி ஆகித்
துகள்தரும் அணுவாய் வெற்பின் தோற்றமாய் உயிரையெல்லாம்
தகவுடன் அவனி ஆக்கித் தரிப்பவன் எம்மை இந்த
மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, மற்றும் பாகம் 3, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. பிரமோத்தர காண்டம் 12 சிவகவசம் உரைத்த அத்தியாயம்
  2. இந்த நூலின் முகப்பிலுள்ள குறிப்பு.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya