சி. நடராஜசிவம்
சின்னையா நடராஜசிவம் (எஸ். நடராஜசிவம், 1946 - சூன் 24, 2020) இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவர். திறமை வாய்ந்த வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட, மேடை நடிகருமாவார். நீண்டகாலம் இலங்கை வானொலியில் பணியாற்றிய பின்னர் சூரியன் எஃப். எம். வானொலியில் நிகழ்ச்சிப் பணிப்பாளராகப் பணியாற்றினார்.[1] இவரது மனைவி புவனலோஜினி இலங்கை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்புயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நடராஜசிவத்தின் தந்தை சின்னையா கொழும்பில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தாயார் திருகோணமலையைச் சேர்ந்தவர். கொழும்பு புனித யோசேப்பு கல்லூரியில் கல்வி கற்றார். நடராஜசிவம் இலங்கை வானொலியில் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்குபற்றித் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். பின்னர் அறிவிப்பாளராகப் பயிற்சி எடுத்து வர்த்தக ஒலிபரப்பில் அறிவிப்பாளராக இணைந்து 35 ஆண்டுகள் வரை அங்கு பணியாற்றினார். இலங்கை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியாற்றிய புவனோஜினி வேலுப்பிள்ளையைத் திருமணம் புரிந்தார். வானொலியில்"ஒதெல்லோ", "நத்தையும் ஆமையும்" முதலான பல வானொலி நாடகங்களில் நடித்ததோடு, ஒலிச்சித்திரங்களிலும் பங்குபற்றியிருக்கிறார். மேடை நாடகங்கள்ஏராளமான மேடை நாடகங்களில் நடித்தவர்
தொலைக்காட்சியில்ரூபவாகினியில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையைப்பெற்ற, மருத்துவர் ஜே. ஜெயமோகன் எழுதிய 'கற்பனைகள் கலைவதில்லை' என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர். தொடர்ந்து பல சிங்களத் தொடர் நாடகங்களில் நடித்தவர்.
திரைப்படங்களில்
மறைவுநடராஜசிவம் சுகவீனமுற்ற நிலையில் 2020 சூன் 24 புதனிரவு கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தனது 74-வது அகவையில் காலமானார்.[1] இவரது மனைவி புவனலோஜினி 2022 மே 3 இல் அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் காலமானார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia