சி. வே. சண்முகம்சி. வே. சண்முகம் (C. V. Shanmugam) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் சட்டப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இவருடைய தந்தை வேணுகோபால் வந்தவாசி தொகுதி எம்.பி. யாகவும், ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட அமைப்பாளராகவும் இருந்துள்ளார்.[1] இவர் 2011 மற்றும் 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் விழுப்புரம் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2] தமிழக அரசின் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு மற்றும் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[3] 2016-2021 ஆண்டு வரை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சார்ந்தவர். நாடாளுமன்ற உறுப்பினர்சி. வே. சண்முகம் 2022ஆம் ஆண்டு சூன் மாதம் நடைபெற இருந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia