சீசியம் நைட்ரேட்டு
சீசியம் நைட்ரேட்டு (Caesium nitrate) என்பது CsNO3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பட்டாசு மற்றும் வானவெடிகளில் நிறம்வழங்கி மற்றும் ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. வெடிக்கத் தூண்டும் பொருள் மற்றும் ஒளியூட்டும் கிளாரொளி முதலியனவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 852.113 நா.மீ மற்றும் 894.347 நா.மீ என்ற சக்திவாய்ந்த இரண்டு நிறமாலை வரிகள் சீசியம் உமிழ்வுக்கு காரணமாகின்றன. அகச்சிவப்பு அலைமாலையியல், எக்சு கதிர் ஒளிரும் பொருள் மற்றும் மினுமினுப்பு எண்ணிகளில் சீசியம் நைட்ரேட்டு பட்டகங்கள் பயன்படுகின்றன. ஒளியியல் கண்ணாடிகள் மற்றும் வில்லைகள் தயாரிப்பிலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. பிற காரவுலோக நைட்ரேட்டுகள் போலவே இலேசான சூடுபடுத்தலில் சீசியம் நைட்ரேட்டும் சிதைவடைந்து சீசியம் நைட்ரைட்டைக் கொடுக்கிறது. சீசியம் உலோகம் வழக்கத்திற்கு மாறான இரண்டு அமில நைட்ரேட்டுகளாக உருவாகிறது. அவை CsNO3•HNO3 மற்றும் CsNO3•2HNO3 உருகுநிலை 100° செல்சியசு மற்றும் 36-38° செல்சியசு கொண்டவை என்று விவரிக்கப்படுகின்றன. மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia