சீதாமௌ இராச்சியம்
சீதாமௌ இராச்சியம் (Sitamau State) பிரித்தானிய இந்தியாவின் கீழ் இருந்த சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் சீதாமௌ நகரம் ஆகும். இது தற்கால இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டசௌர் மாவட்டத்தில் இருந்தது. சீதாமௌ இராச்சியத்தை 1701-ஆம் ஆண்டில் நிறுவியவர் இராஜா கேசவதாஸ் ஆவார். 350 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்த சீதாமௌ இராச்சியத்தின் சராசரி ஆண்டு வருவாய் ரூபாய் 1,30,000 ஆகும்.[1] முகலாயர்]]களுக்கு ஜிஸ்யா வரியை செலுத்தாத காரணத்தால் ரத்லம் இராச்சியத்தை முகலாயப் பேரரசில் இணைத்தனர். 1705-இல் கேசவதாஸ் ரத்லம் இராச்சியத்தை சீதாமௌ இராச்சியத்துடன் இணைத்து கொண்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948-ஆம் ஆண்டில் அரசியல் இணைப்பு ஒப்பந்தப்படி சீதாமௌ இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஆட்சியாளர்கள்சீதாமௌ இராச்சியத்தின் ஆட்சியாளர்கள் இராஜபுத்திரர்களான ரத்தன் சிங் ரத்தோரின் வழித்தோன்றல்கள் ஆவார்.[2] மன்னர்கள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia